அரசியல் சாசன தினம் (இந்தியா)
அரசியல் சாசன தினம் संविधान दिवस | |
---|---|
திருத்தங்களுக்கு முன் இந்திய அரசியலமைப்பு அறிமுகவுரை அசல் உரை | |
அதிகாரப்பூர்வ பெயர் | அரசியலமைப்பு தினம் |
கடைபிடிப்போர் | இந்தியா |
முக்கியத்துவம் | இந்தியா ஏற்கப்பட்டது அரசியலமைப்பு 1949 இல் |
கொண்டாட்டங்கள் | பள்ளிகள் உள்ள அரசியல் தொடர்பான நடவடிக்கைகள், சமத்துவத்திற்கான இயக்கம்,சிறப்புப் பாராளுமன்றக் கூட்டம் |
நாள் | நவம்பர் 26 |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
முதல் முறை | 2015 |
தொடர்புடையன | இந்திய அரசியலமைப்புச் சட்டம் |
இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) அல்லது சட்ட தினம்(Law Day) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 ஆம் திகதியன்று முதல் முறையாக [1] அனுசரிக்கப்படுவதாகவும். மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக, கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.[2]
துவக்கம்
[தொகு]இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட டாக்டர் அம்பேத்கர்[3] என்பவரை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில் உள்ள இந்திய அரசால் 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் அரசியல் சாசன தினம் துவக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.[4]
வரலாறு
[தொகு]தெற்கு ஆசியா நாடான இந்தியாவின் பெரும்பகுதி 1858 லிருந்து 1947 வரையில் ஆங்கிலேயர்கள் காலனித்துவ ஆட்சிக்கு கீழ் இருந்துள்ளது.[5] இக்காலகட்டத்தில், ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலைப்பெற இந்திய சுதந்திர இயக்கம் படிப்படியாக முயன்று வெற்றியை ஈட்டியது. 1934 ஆம் ஆண்டுவாக்கில் இந்திய நாட்டிற்கு அரசியல் நிர்ணயசபை அமைக்க ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பிறகு 1936 இலும், மற்றும் 1939-லும் இருமுறை இக்கோரிக்கையை பற்றி வலியுறத்தப்பட்டன. அதன்படி 1942 ஆம் ஆண்டு மார்ச் இல் கிரிப்ஸ் தூதுக்குழு அரசியல் நிர்ணய சபையை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன்பின்பு 1946 மே இல் அரசியல் நிர்ணய சபை ஏற்பத்த பரிந்துரைக்கப்பட்டு, 1946 சூலையில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடைபெற்றது 1946 திசம்பர் 11 இல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு அச்சபையின் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்வு செய்யப்பட்டார்.[6]
1947 ஆகத்து 15 க்கு (விடுதலைக்கு) பின்பு, பிரித்தானியாவின் இந்தியா, இந்திய மாகாணம், பாக்கித்தான் மாகாணம் என இருவேறு பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச்சாசனத்தை, உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணயசபை குழு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.[7]
இவையையும் காண்க
[தொகு]உப தகவல்கள்
[தொகு]- இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை 1946 திசம்பர் 6-ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்டது.[8]
- இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை முதல் கூட்டம் 1946-ம் ஆண்டு திசம்பர்-9-ல் நடைபெற்றது.[9]
- இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை தலைவராக டாக்டர் சச்சிதானந்த சின்கா (தர்க்காலிகம்) செயற்பட்டார்.[10]
- இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை தலைவராக டாக்டர் இராசேந்திர பிரசாத் (நிரந்தரம்) தலைமைவகித்தார்.[11]
- இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை முதல் கூட்டம் தில்லியில் நடைபெற்றது.[12]
- இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தின் கீழ் உறுவாக்கப்பட்டது.[12]
- இந்திய அரசியலமைப்பு எழுது வரைவுக்குழு தலைவராக டாக்டர் அம்பேத்கர் செயல்பட்டார்.[13]
- இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின், ஆரம்பகால மொத்தம் 389 உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.[14]
- இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின், உறுப்பினர்களின் எண்ணிக்கை 299-ஆக இருந்தது.[14]
- இந்திய அரசியலமைப்பு பொதுவாக இங்கிலாந்து அரசியலமைப்போடு ஒத்ததாகும்.[15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Daily GK Update: 26th November 2015 By GradeStack On November 26, 2015". Archived from the original on மார்ச் 22, 2016. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 28, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ India celebrating.com 2015
- ↑ Laws governing Public Interest Litigation in India
- ↑ "PM Modi greets nation on first Constitution Day AUTHOR: NITICENTRAL STAFF - NOVEMBER 26, 2015". Archived from the original on டிசம்பர் 13, 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 26, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); horizontal tab character in|title=
at position 56 (help) - ↑ BBC-From Empire to Independence: The British Raj in India 1858-1947-By Dr Chandrika Kaul-Last updated 2011-03-03
- ↑ Constituent Indian Assembly between the years 1946 to 1950 by : Vikram Rana
- ↑ CONSTITUENT ASSEMBLY OF INDIA - VOLUME XI Saturday, the 26th November,1949
- ↑ Constituent Assembly – December 6, 1946
- ↑ ASSEMBLY OF INDIA - Volume I-Monday, the 9th December 1946
- ↑ World Hindu News
- ↑ United State of India
- ↑ 12.0 12.1 FIRST DAY IN THE CONSTITUENT ASSEMBLY
- ↑ CONSTITUENT ASSEMBLY OF INDIA - VOLUME XI-Friday, the 25th November, 1949
- ↑ 14.0 14.1 FIRST DAY IN THE CONSTITUENT ASSEMBLY-SOME FACTS
- ↑ The Indian Constitution-Introduction to the Indian Constitution