அரசரடி
அரசரடி
Arasaradi அரசரடி | |
---|---|
ஆள்கூறுகள்: 9°55′39.4″N 78°05′58.2″E / 9.927611°N 78.099500°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 161 m (528 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625016 |
தொலைபேசி குறியீடு | +91452xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, ஆரப்பாளையம், விளாங்குடி, கூடல் நகர், தத்தனேரி, காளவாசல், கோச்சடை, எஸ். எஸ். காலனி, பழங்காநத்தம் |
மாநகராட்சி | மதுரை மாநகராட்சி |
இணையதளம் | https://madurai.nic.in |
அரசரடி (Arasaradi) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில்,[1] 9°55'39.4"N, 78°05'58.2"E (அதாவது, 9.927600°N, 78.099500°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 161 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். மதுரை, ஆரப்பாளையம், விளாங்குடி, கூடல் நகர், தத்தனேரி, காளவாசல், கோச்சடை, எஸ். எஸ். காலனி மற்றும் பழங்காநத்தம் ஆகியவை அரசரடி பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும். அரசரடி பகுதியிலிருந்து மதுரை - ஆரப்பாளையம் பேருந்து நிலையம் சுமார் 1.5 கி.மீ. தூரத்திலேயே அமைந்திருக்கிறது. இங்கிருந்து சுமார் 2.5 கி.மீ. தூரத்தில் மதுரை - பெரியார் பேருந்து நிலையம் மற்றும் சுமார் 8.5 கி.மீ. தொலைவில் மதுரை எம்.ஜி.ஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஆகியவை உள்ளன. அருகிலுள்ள காளவாசல் சந்திப்பில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள மேம்பாலம் போன்று, அரசரடியிலும் மேம்பாலம் கட்டினால் போக்குவரத்து இன்னும் சுலபமாக்கப்படும் என்று உள்ளூர் மக்கள் கருதுகின்றனர்.[2] மேலும், எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம், இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்றுள்ளது. அரசரடி பகுதியிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அவனியாபுரம் பகுதியில் மதுரை வானூர்தி நிலையம் சிறப்புற அமைந்துள்ளது. மதுரை மாநகரப் பகுதிகளில் 72 வார்டுகளுக்கு குடிநீர் தேவைக்காக தண்ணீர் சரக்குந்துகள் மூலம் விநியோகம் செய்யும் பொருட்டு அவைகளுக்குத் தேவையான நீர், அரசரடியில் உள்ள நீர் உந்தி நிலையம் மூலம், தினமும் காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.[3] அரசரடியில் தலைமை தபால் அலுவலகம் ஒன்று உள்ளது.[4] மேலும், அரசரடியில் தெற்கு இரயில்வேயின் விளையாட்டரங்கம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.[5] மதுரையில் வாழ்ந்து மறைந்த மகான் குழந்தையானந்தர் அடக்கம் செய்யப்பட்ட இடம் அரசரடி என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் அவரது அரசரடி அதிஷ்டானத்திற்கு அவரது பக்தர்கள் வந்து செல்கின்றனர்.[6] அரசரடியில் தமிழ்நாடு இறையியல் குருத்துவக் கல்லூரி அமையப் பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Readings in Indian Christian Theology (in ஆங்கிலம்). ISPCK. 1995. ISBN 978-81-7214-139-4.
{{cite book}}
: Unknown parameter|authors=
ignored (help) - ↑ Sundar, S. (2020-06-15). "Fewer vehicles ply on new flyover at Kalavasal: residents" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Madurai/fewer-vehicles-ply-on-new-flyover-at-kalavasal-residents/article31834651.ece.
- ↑ Ganesh, Sanjana (2018-04-11). "Arasaradi, heart of water supply system" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Madurai/arasaradi-heart-of-water-supply-system/article23499073.ece.
- ↑ "Lokal Tamil - தமிழ் செய்திகள்". https://tamil.getlokalapp.com/tamilnadu-news/madurai/madurai-city/foreign-mail-booking-facility-at-post-offices-8661504.
- ↑ "On the starting line for 'Maduraikkagathan'". The Hindu (in Indian English). 2013-02-03. Retrieved 2022-12-23.
- ↑ Nagarajan, S. (2021-12-28). Mahangalin Saritham Part 1. Pustaka Digital Media.