அமி சைமன்
அமி சைமன் (Amy Simon) (பிறப்பு: 1971) ஓர் அமெரிக்க கோள் அறிவியலாளர் ஆவார். இவர் நாசாவின் கோடார்டு விண்வெளி பறத்தல் மையத்தில் பணிபுரிகிறார். இவர் பல சூரியக் குடும்பத் தேட்டத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.[1]
கல்வி
[தொகு]சைமன் நியூசெர்சியில் உள்ள யூனியன் கவுன்டி சர்ந்த யூனியன் ந்கரியத்தில் பிறந்த்வர்.[2] இங்கு இவர் யூனியன் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.[3] இவர் புளோரிடா தொழில்நுட்ப நிறுவனத்தில் தன் பட்டத்தை விண்வெளி அறிவியலில் 1993 இல் பெற்றார்.[4] அப்போது இவர் சிக்மா பை சிக்மா குழுவில் இணைந்தார். இவர் 1998 இல் நியூமெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[5] பிறகு இவர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் ஆய்வு அறிவியலாளர் ஆனார்.
வாழ்க்கைப்பணி
[தொகு]சைமன் 2001 இல் நாசாவில் பொதுப் பணியாளராகச் சேர்ந்து நாசாவின் கோடார்டு விண்வெளி பறத்தில் மையத்தில் சூரிய தேட்டக் கோட்டத்தில் முதுநிலை அறிவியலாளரகப் பணிபுரிகிறார். இவர் 2008 முதல் 2010 வரை கோள் அமைப்புகள் ஆய்வகத்தின் தலைவராக இருந்தார். பிறகு 2010 முத்ல் 2013 வரை கோட்ட இணை இயக்குநராகப் பொறுப்பேற்றிருந்தார்.[4]
இவரது ஆய்வு வியாழன் கோள் வளிமண்டல உட்கூறுகள், இயக்கம், முகில் கட்டமைப்பு பற்றியதாகும். இவர் இவற்றை விண்கல ஆய்வூட்க மேற்கொள்கிறார். இவர் இவற்றைப் பற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[6]
ஆய்வுகள்
[தொகு]இவரது முதல் விரிவான ஆய்வு வியாழன் கோளின் பெருஞ்செம்புள்ளி வடிவ மாற்றம் பற்றியதாகும். இவர் வியாழன் வளிமண்டலத்தில் நிலவும் பலவகை அலைகளைக் கண்டறிந்துள்ளார்.[7][8][9] வாயேஜர் 2, காசினி-ஐகன்சு, அபுள், நியூ ஒரைசன்சு விண்கலப் படிமங்களைச் சார்ந்த இவரது ஆய்வுகள் பல புதிய வியாழன் கோள் வளிமண்டல அலைகளைப் பற்றிய கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது.[10][11][12]
வியாழன் கோளுக்கு அப்பால், இவர் காரிக் (சனிக்) கோளி வேதியியலையும் இயக்கத்தையும் அதன் வடமுனையில் அமைந்த அறுகோணத்தையும் பற்றி ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார்.[13] கெப்ளர் விண்கலத் தொலைநோக்கியைப் பய்ன்படுத்தி நெப்டியுனைப் பார்வையிட்ட குழுவில் ஒருவராக இருந்துள்ளார். இவர் முதன்முதலாக அக்கோள் எதிர்பலித்து அனுப்பிய ஒளியில் சூரிய அலைவுகளைக் கண்டுபிடித்துள்ளார்.[14][15]
சைமன் நாசாவின் பல எந்திரன்களைப் பயன்படுத்திய கோள் ஆய்வுத் திட்டங்களில் பங்கேற்றுள்ளார். இவர் காசினி-ஐகன்சு திட்ட்த்திலும் க்லப்பு அகச்சிவப்புக் கதிர்நிரல் அளவித் திட்டத்திலும் பங்கேற்றுள்ளார். இவர் the இவர் இணைக் கருவி அறிவியலாளராக ஓசிரிசு-ரெக்சு (OSIRIS-Rex) கட்புலக் கதிர்நிரல் அளவித் திட்ட்த்திலும் நிலச்செயற்கோள் 9 (Landsat 9) வெப்ப அகச்சிவப்புணரி 2 திட்ட்த்திலும் பணிபுரிந்துள்ளார்[16] இவர் இணை முதன்மை ஆய்வாளராக உலூசி விண்கலத்தில் எல்ரால்பு கருவித் திட்டத்திலும் பணிபுரிந்துள்ளார்.[17]
இவர் அபுள் புறக்கோள் வளிமண்டலங்கள் திட்டத்தின் (OPAL program) தகைவுறு முதன்மை ஆய்வாளர் ஆவார்.[18] இவரது குழு அபுள் தொலைநோக்கியைப் பயன்படுத்தி நெப்டியுனின் புதிய கரும்பெரு பொட்டைக் கண்டுபிடித்தது.[19] and have published more than 12 manuscripts from OPAL data.[18] ஓசிரிசு-ரெக்சு திட்ட்த்தில் இவரது பணி பென்னு சிறுகோளின் மேற்பரப்பில் அமைந்த நீர்மக் கனிமங்களின் கண்டுபிடிப்புக்கு உதவியது. இப்பணி இவருக்கு நாசாவின் மீத்தகைமை அறிவியல் சாதனை பதக்கத்தை ஈட்டித் தந்தது [20].
தேட்டங்கள்
[தொகு]சைமன் மேலும் பல எதிர்காலக் கோள்தேட்டத் திட்டங்களுக்கு வழிவகுத்து வருகிறார். மேலும் இவர் தேசிய அறிவிய கல்விக்கழகத்தின் விண்வெளி ஆய்வுகள் வாரியத்தின் (2013) பத்தாண்டுக் கோள் அறிவியல் அளக்கைப் பணியில் பங்கேற்றுள்ளார்.[21] இவர் நாசாவின் பல் வெற்றிக்கொடி நாட்டும் திட்டங்களின் இணைத்தலைவராக இருந்துள்ளார். இவற்றில் என்சிலாடசு திட்டமும் பனிப்பெருங்கோள்களான யுரேனசு, நெப்டியூன் திட்டங்களும் அடங்கும்.[22][23] இவர் தற்போது முன்மொழியப்பட்டுள்ள புது முன்னணிவகை சார்ந்த சுப்பிரைட் விண்கலவழிக் காரிக்கோள் திட்டத்தின் முதன்மை ஆய்வாளர்கவும் உள்ளார்.
இவர் அமெரிக்கப் புவி இயற்பியல் ஒன்றியத்தின் உறுப்பினரும் அமெரிக்க வானியல் கழகத்தின் உறுப்பினரும் கோள் அறிவியல் கோட்ட உறுப்பினரும் ஆவார்.
தகைமைகளும் விருதுகளும்
[தொகு]- இவர் 2020 ஆம் ஆண்டுக்கான நாசாவின் தன்னிகரற்ற த்லைமைப் பதக்கத்தைப் பெற்றார் [24].
- மேலும் இவர் 2020 ஆண்டுக்கான ஜான் சி. இலிண்டுசே நினைவு விண்வெளி அறிவியல் விருதையும் பெற்றார் [25].
- இவர் 2019 இல் நாசாவின் தன்னிகரற்ற அறிவியல் சாதனை விருது பெற்றார்.
- இவர் 2017 இல் ஓவிரிசு குழு சார்ந்த நாசாவின் வெள்ளிச் சாதனைப் பதக்க்த்தைப் பெற்றார்.
- இவர் 2017 இல் ஓசிரிசு-ரெக்சு குழு சார்ந்த நாசாவின் குழுச் சாதனை விருதினைப் பெற்றார்.
- இவர் 2016 இல் அபுள் ஓப்பல் குழுவைச் சார்ந்த இராபர்ட் எச். கோடார்டு அறிவியல் சாதனை விருதைப் பெற்றார்.
- இவர் 2016 இல் ஓவிரிசு குழுவைச் சார்ந்த இராபர்ட் எச். கோடார்டு பொறியியல் சாதனை விருதைப் பெற்றார்.
- மேலும் இவர் 2016 இல் நாசாவின் தன்னிகரற்ற பணிப் பதக்கத்தைப் பெற்றார்.[26]
- இவர் 2014 இல் ஓவிரிசு குழுவைச் சார்ந்த இராபர்ட் எச். கோடார்டு பொறியியல் தன்னிகரின்மை விருதைப் பெற்றார்.
- இவர் 2014 இல் நாச்சவின் தன்னிகரற்ற பணிப் பதக்கத்தைப் பெற்றார்.[27]
- 2003 இல் காட்டலினா விண்ணளக்கைத் திட்டத்தில் கண்டறிந்த சிறுகோள் 84994 அமிசைமன் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.[1] இதற்கான அறிவிப்பு 2014, மே 14 அன்று சிறுகோள் மையத்தால் வெளியிடப்பட்டது4 (M.P.C. 88406).[28]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "(84994) Amysimon". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 18 January 2020.
- ↑ Amy Simon: Planetary Scientist, NASA. Accessed September 13, 2018. "[Q] Where are you from? [A] I am originally from Union, N. J."
- ↑ Parkinson, Claire L.; Millar, Pamela S.; and Thaller, Michelle. (editors). Women of Goddard: Careers in Science, Technology, Engineering and Mathematics, NASA Goddard Space Flight Center, July 2011, p. 111. Accessed September 13, 2018. "Amy Simon-Miller Union High School, Union, New Jersey"
- ↑ 4.0 4.1 "Bio - Amy A. Simon". science.gsfc.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2018-08-19.
- ↑ "NMSU Astronomy Alumni". astronomy.nmsu.edu. October 2015. Archived from the original on 2018-07-28. பார்க்கப்பட்ட நாள் 2018-06-04.
- ↑ "Google scholar profile: Amy A. Simon". Google Scholar. பார்க்கப்பட்ட நாள் 2018-08-16.
- ↑ Simon-Miller, A. A; Gierasch, P. J; Beebe, R. F; Conrath, B; Flasar, F. M; Achterberg, R. K (2002). "New Observational Results Concerning Jupiter's Great Red Spot". Icarus 158 (1): 249–266. doi:10.1006/icar.2002.6867. Bibcode: 2002Icar..158..249S.
- ↑ Simon, A. A; Tabataba-Vakili, F.; Cosentino, R.; Beebe, R. F.; Wong, M. H; Orton, G. S (2018). "Historical and Contemporary Trends in the Size, Drift, and Color of Jupiter's Great Red Spot". Astronomical Journal 155 (4): 151. doi:10.3847/1538-3881/aaae01. Bibcode: 2018AJ....155..151S.
- ↑ "Jupiter's Great Red Spot Getting Taller as it Shrinks, NASA Team Finds". nasa.gov. 2018-03-12. பார்க்கப்பட்ட நாள் 2018-03-13.
- ↑ Simon, A. AExpression error: Unrecognized word "et". (2018). "A New, Long-Lived, Jupiter Mesoscale Wave Observed at visible Wavelengths". Astronomical Journal 156 (2): 79. doi:10.3847/1538-3881/aacaf5. பப்மெட்:30510304. Bibcode: 2018AJ....156...79S.
- ↑ Simon, A. A; Li, L.; Reuter, D.C (2015). "Small-scale waves on Jupiter: A reanalysis of New Horizons, Voyager, and Galileo data". Geophysical Research Letters 42 (8): 2612–2618. doi:10.1002/2015GL063433. Bibcode: 2015GeoRL..42.2612S.
- ↑ Simon-Miller, A. A; Rogers, J. H; Gierasch, P. J; Choi, D. C; Allison, M. D; Adamoli, G.; Mettig, H. J (2012). "Longitudinal Variation and Waves in Jupiter's South Equatorial Wind Jet.". Icarus 218 (2): 817–830. doi:10.1016/j.icarus.2012.01.022. Bibcode: 2012Icar..218..817S.
- ↑ Morales-Juberias, R.; Sayanagi, K. M; Simon, A. A; Fletcher, L.N.; Cosentino, R. G (2015). "Meandering Shallow Atmospheric Jet as a Model of Saturn's North-Polar Hexagon.". Astrophysical Journal Letters 806 (1): L18. doi:10.1088/2041-8205/806/1/L18. Bibcode: 2015ApJ...806L..18M.
- ↑ Simon, A. AExpression error: Unrecognized word "et". (2016). "Neptune's Dynamic Atmosphere for Kepler K2 Observations: implications for Brown Dwarf Light Curve Analysis.". Astrophysical Journal 817 (2): 162. doi:10.3847/0004-637X/817/2/162. பப்மெட்:28127087. Bibcode: 2016ApJ...817..162S.
- ↑ Gaulme, P.Expression error: Unrecognized word "et". (2016). "A Distant Mirror: Solar Oscillations Observed on Neptune by the Kepler K2 Mission.". Astrophysical Journal Letters 833 (1): L13. doi:10.3847/2041-8213/833/1/L13. Bibcode: 2016ApJ...833L..13G.
- ↑ "Landsat 9 Science Instrument Details". landsat.gsfc.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2018-08-19.
- ↑ "The Lucy Spacecraft and Payload". lucy.swri.edu. பார்க்கப்பட்ட நாள் 2018-08-19.
- ↑ 18.0 18.1 "Outer Planet Atmospheres Legacy Program". stsci.edu. பார்க்கப்பட்ட நாள் 2018-08-19.
- ↑ Wong, M. HExpression error: Unrecognized word "et". (2018). "A New Dark Vortex on Neptune.". Astronomical Journal 155 (3): 117. doi:10.3847/1538-3881/aaa6d6. Bibcode: 2018AJ....155..117W.
- ↑ Hamilton, V.E.Expression error: Unrecognized word "et". (2019). "Evidence for widespread hydrated minerals on asteroid (101955) Bennu". Nature Astronomy 3 (4): 332–340. doi:10.1038/s41550-019-0722-2. பப்மெட்:31360777. பப்மெட் சென்ட்ரல்:6662227. Bibcode: 2019NatAs...3..332H. http://oro.open.ac.uk/60674/1/Hamilton_et_al_2019.pdf.
- ↑ "Planetary Science Decadal Survey". National Academies. Archived from the original on 2012-02-02. பார்க்கப்பட்ட நாள் 2018-09-07.
- ↑ "Enceladus: Saturn's Active Ice Moon" (PDF). lpi.usra.edu. பார்க்கப்பட்ட நாள் 2018-09-07.
- ↑ "Ice Giants Mission Planning". lpi.usra.edu. பார்க்கப்பட்ட நாள் 2018-09-07.
- ↑ "Solar System Exploration Division (690) Awards Won". science.gsfcnasa.gov. NASA. பார்க்கப்பட்ட நாள் 2021-02-08. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
- ↑ "Lindsay Awards and Lectures". science.gsfcnasa.gov. NASA. பார்க்கப்பட்ட நாள் 2021-03-05. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
- ↑ "Sciences and Exploration Directorate (600) Awards Won". nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2018-08-17.
- ↑ "NASA Agency Honor Awards 2014" (PDF). nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2018-08-17.
- ↑ "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 18 January 2020.