உள்ளடக்கத்துக்குச் செல்

அமினோஃபைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமினோஃபைட்டுAminoffite
சுவீடனின் இலாங்பன்னில் கிடைத்த அமினோஃபைட்டு
பொதுவானாவை
வகைசிலிக்கேட்டு கனிமம்
வேதி வாய்பாடுCa2(Be,Al)(Si2O7)(H2O,OH)
இனங்காணல்
படிக அமைப்புநாற்கோண அமைப்பு கனிமம்
மோவின் அளவுகோல் வலிமை2.5–6.0
மேற்கோள்கள்[1][2]

அமினோஃபைட்டு (Aminoffite) என்பது சிலிக்கேட்டு வகுப்பைச் சேர்ந்த ஒரு கனிமமாகும். இது முதன்முதலில் 1937 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. சுவீடன் நாட்டின் இலாங்பன் பகுதியிலுள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பணியாற்றிய கனிமவியலில் நிபுணரும் கலைஞருமான கிரிகோரி அமினோஃப் (1883–1947) என்பவரைக் கௌரவிக்கும் வகையில் கனிமத்திற்கு அமினோஃபைட்டு என பெயர் சூட்டப்பட்டது.[3]

பண்புகள்

[தொகு]

அமினோஃபைட்டு என்பது Ca2(Be,Al)(Si2O7)(H2O,OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் சிலிக்கேட்டு ஆகும். இது நாற்கோணவமைப்புப் படிகமாக படிகமாகிறது.[4] மோவின் கடினத்தன்மை அளவுகோலில் இதன் கடினத்தன்மை அளவு 5.5 முதல் 6 வரை உள்ளது. நிக்கல்–இசுட்ரன்சு வகைப்பாட்டின் படி, அமினோஃபைட்டு "09.BH போரோசிலிக்கேட்டு வகையில் சேர்க்கப்படுகிறது. Si3O10, Si4O11 போன்ற எதிர்மின் அயனிகள் இச்சோரோசிலிகேட்டில் காணப்படும். நேர்மின் அயனிகள் நான்முகி ஒருங்கிணைப்பில் உள்ளன. அதிக ஒருங்கிணைப்பில் உள்ள நேர்மின் அயனிகள் கினோயிட்டு, அகடோரைட்டு மற்றும் பென்கூபெரைட்டு ஆகிய கனிமங்களுடன் சேர்ந்துள்ளது.

தோற்றமும் படிவுகளும்

[தொகு]

பாரிய காந்தம் மற்றும் இலிமோனைட்டில் உள்ள விளிம்புகள் மற்றும் குழிகளில் அமினோஃபைட்டுகள் நன்கு உருவான படிகங்களாகக் காணப்படுகின்றன. பொதுவாக காந்தம், கோதைட்டு, புளோரைட்டு, கால்சைட்டு மற்றும் பாரைட்டு போன்ற பிற கனிமங்களுடன் தொடர்பு கொண்ட கனிமமாகக் காணப்படுகிறது. இது 1937 ஆம் ஆண்டு சுவீடனின் வார்ம்லாந்தின் பிலிப்சுடாட்டு, லாங்பானில் கண்டுபிடிக்கப்பட்டது. உருசியாவின் துவாவின் துக்டு மற்றும் ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சின் தரோங்காவில் உள்ள காரப் பாறைப் பகுதிகளிலும் இது கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "aminoffite". mindat.org.
  2. "Aminoffite Mineral Data". webmineral.com.
  3. Hurlbut, Cornelius S. (January 1937). "Aminoffite, a new mineral from Långban". Geologiska Föreningen i Stockholm Förhandlingar 59 (3): 290–292. doi:10.1080/11035893709444957. 
  4. Huminicki, D. M.C.; Hawthorne, F. C. (1 June 2002). "Refinement of the crystal structure of aminoffite". The Canadian Mineralogist 40 (3): 915–922. doi:10.2113/gscanmin.40.3.915. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமினோஃபைட்டு&oldid=4210419" இலிருந்து மீள்விக்கப்பட்டது