அமர்நாத் கொடுமுடி
அமர்நாத் சிகரம் | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 5,186 m (17,014 அடி) |
ஆள்கூறு | 34°13′30″N 75°29′30″E / 34.22500°N 75.49167°E |
புவியியல் | |
அமைவிடம் | காஷ்மீர் பள்ளத்தாக்கு |
மூலத் தொடர் | இமயமலை |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | எவரும் ஏறவில்லை |
எளிய வழி | சோசிலா கணவாயின் வடக்கில் |
அமர்நாத் சிகரம் (Amarnath Peak), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. காசுமீர் பள்ளத்தாக்கின் காந்தர்பல் மாவட்டத்தில் அமைந்த அமர்நாத் சிகரம் 5,186 மீட்டர்கள் (17,014 அடி) உயரம் கொண்டது. இது சோசிலா கணவாய்க்கு தெற்கில் அமைந்துள்ளது. அமர்நாத் சிகரம் சிறீநகருக்கு வடகிழக்கில் 117 கிலோ மீட்டர் தொலைவிலும், பால்தாலுக்கு தென்கிழக்கே 13 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
அமர்நாத் மலை புனித மலையாக கருதப்படுகிறது.[1] இதன் தெற்கு முகத்தில் 3,800 மீட்டர் (12,470 அடி) உயரத்தில் அமர்நாத் குகைக் கோயில் என்று அழைக்கப்படும் ஒரு குகை உள்ளது. இந்த குகை மிகவும் பழமையானதாகும். இந்து மதத்தில் புனித யாத்திரைக்காக மிகவும் புனிதமான இடமாகவும் நம்பப்படுகிறது.[2] கோடை காலத்தில் இந்து யாத்ரீகர்களுக்கான புனித மையமாகத் திகழ்கிறது.
மலையேற்ற வரலாறு
[தொகு]மத முக்கியத்துவம் காரணமாக, அமர்நாத் சிகரத்தில் யாரும் ஏறுவதில்லை. முதன்முதலில் 1912 ஆம் ஆண்டில் எர்னசுட்டு நெவ் தலைமையிலான பிரித்தானிய மருத்துவக் குழு இச்சிகரத்தில் ஏறி ஆய்வு செய்தது. இவர் இமயமலைத் தொடரின் பெரும்பாலான சிகரங்களை ஆய்வு செய்தார்.[3] இசுக்காட்லாந்து நாட்டின் கர்னல் என்.என்.எல். வாட்சு இந்த சிகரத்தின் தடங்கள் வழியாகச் சென்று 1933 ஆம் ஆண்டில் சிகரத்தை ஏற எளிதான வழியைக் கண்டுபிடித்தார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Geography of Kashmir". kousa.org. பார்க்கப்பட்ட நாள் 2012-05-01.
- ↑ "Amarnath yatra the most sacred and ancient". amarnathyatra.org. பார்க்கப்பட்ட நாள் 2012-05-01.
- ↑ Comins, Dave (1990–91). Sondheimer, Ernst. ed. "Schoolboys on Kolahoi". Alpine Journal 95. பன்னாட்டுத் தர தொடர் எண்:0065-6569. https://www.alpinejournal.org.uk/Contents/Contents_1990-91_files/AJ%201990%2050-53%20Comins%20Kolahoi.pdf. பார்த்த நாள்: 2016-08-05.
- ↑ "Mountaineering in the Kashmir Himalaya". himalayaclub.org. பார்க்கப்பட்ட நாள் 2012-05-01.