உள்ளடக்கத்துக்குச் செல்

அப்போலோனியஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்பல்லோனியஸின் படைப்புகளின் 1537 பதிப்பிலிருந்து அவரது தோற்றம்

அப்போலோனியஸ் (Apollonius of Perga) (கி.மு. 262 – 200) என்பவர் பண்டைக் கிரேக்கத்தைச் சேர்ந்த மாபெரும் கணித மேதையும், வானியல் வல்லுநருமாவார். இவர் சின்ன ஆசியாவிலுள்ள பொ்காவில் பிறந்தாா். அங்கிருந்து அலெக்சாந்திரியா சென்று யுக்ளிடின் சீடா்களிடம் பயின்றாா். பல்வேறு கணிதத் தலைப்புகளில் நுால்களை எழுதியுள்ளாா். இவா் கூம்பு வெட்டு வடிவங்களான பரவளைவு, அதிபரவளைவு, நீள்வட்டம் ஆகியவற்றைக் கண்டறிந்தாா்.[1]

அப்பல்லோனியஸ் வானியல் உட்பட பல தலைப்புகளில் பணியாற்றினார். இந்த வேலைகளில் பெரும்பாலானவை பிழைக்கவில்லை, விதிவிலக்குகள் பொதுவாக அலெக்சாந்திரியாவின் பாப்பசு போன்ற பிற ஆசிரியர்களால் குறிப்பிடப்பட்ட துண்டுகளாகும். இடைக்காலம் வரை பொதுவாக நம்பப்பட்ட கோள்களின் வெளிப்படையான மாறுபாடு இயக்கத்தை விளக்க விசித்திரமான சுற்றுப்பாதையின் வட்டவிலகல் பற்றிய இவரது கருதுகோள் மறுமலர்ச்சியின் போது மாற்றப்பட்டது. சந்திரனில் உள்ள அப்பல்லோனியஸ் பள்ளம் இவரது நினைவாக பெயரிடப்பட்டது.[2]

கூம்பின் வெட்டுவாய் வடிவங்களைப் பற்றி இவர் காலத்திற்கு முன் அறியப்பட்ட உண்மைகளையும், அவற்றைப்பற்றி இவரே கண்டுபிடித்த பல உண்மைகளையும் கோவையாகத் தொகுத்து எழுதினார். யூக்ளிட்டின் காலத்தில் ஆரம்பமாகி அப்போலோனியஸின் காலத்தோடு முடிவுற்ற கி.மு. மூன்றாம் நூற்றாண்டு, கிரேக்க கணித வரலாற்றில் மிக முக்கியமான காலமாகும்.[3] இவருடைய பல ஆய்வுக்கட்டுரைகள் தொலைந்துவிட்டன. இருந்தபோதிலும், அக்கட்டுரைகளின் தலைப்புகள், பொருள் சுருக்கம் போன்றவை பின்னால் வந்த அறிஞர்களால் வெளிக்கொண்டுவரப்பட்டன.

பிறப்பும், வரலாறும்

[தொகு]

அப்பலோனியஸ் பெர்கா (Perga) விலுள்ள பாம்பை லியாவில் (இது தற்போது துருக்கியில் உள்ளது) கி.மு. 262இல் பிறந்தார். இவர் அலெக்ஸ் சாண்டிரியா நகரத்தில் கல்வி பயின்றார். பெர்கமம் என்ற இடத்திற்குச் சென்ற போது யுடமஸ் (Eudemus) அட்டாலஸ் (Attalus) போன்ற அறிஞர்களைச் சந்திக்க நேர்ந்தது. அதன்பின் அவர்கள் உதவியுடன் கூம்பகத்தைப் பற்றிய முதல் புத்தகத்தை எழுதத் தொடங்கினார். கூம்பகம் தொடர்பான, யூக்லிடு மற்ற பல அறிஞர்களின் கண்டுபிடிப்புகளைச் சார்ந்து. அப்பலோனியஸ் முதல் நான்கு புத்தகங்கள் எழுதினார். அவற்றில் முதல் புத்தகம் வளைவுகளின் பரப்பையும் அவற்றின் அடிப்படைத் தன்மைகளையும், மூன்றாவது புத்தகம் பல தேற்றங்களையும் உள்ளடக்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து, ஆறு, ஏழு ஆகிய புத்தகங்கள் இவருடைய சொந்தக் கருத்துக்களைக் கொண்டவையாகும். தொடுகோட்டின் தன்மைகளைச் சாராமல், செங்கோடுகள் என்பவை, கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகலிருந்து ஒரு வளைவுக்கு வரையப்படும் குறைந்த அளவு அல்லது அதிக அளவு எண்ணிக்கையுடைய நேர் கோடுகளாகும்.

தற்போது கூம்பகத்தின் முதல் நான்கு மூலப்புத்தகங்கள் துருக்கிய மொழியிலும் அடுத்த மூன்று புத்தகங்கள் அரபு மொழி பெயர்ப்பிலும் இருக்கின்றன. எட்டாவது புத்தகம் தொலைந்துவிட்டது. அவருடைய மூன்று வகையான வட்ட முகங்களுக்கு நீள்வட்டம் (ellipse), பரப்பளவு (Parabola), அதிவளைவு (Hyperbola) என்ற பெயர்களை அறிமுகப்படுத்தினார். இவருடைய மொத்த ஆய்வுக்கட்டுரைகளில் 13 கட்டுரைகள் நமக்குக் கிடைத்துள்ளன. பல ஆய்வுக்கட்டுரைகள் இவர் வெளியிடப்பட்டுள்ளதை அதன் பின் வாழ்ந்த அறிஞர்களின் புத்தகங்களிலிருந்தும், ஆய்வுக் கட்டுரைகளிலிருந்தும் அறிய முடிகிறது. இவர் கி.மு.190 இல் அலெக்சாண்டிரியாவில் காலமானார்.

நூலோதி

[தொகு]
  1. Britannica, Vol-1, Encyclopaedia Britannica. Chicago, 1985.
  2. Encyclopaedia Americana, Vol-2, Americana Corporation, Danburg, Connecticut, 1980.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gottfried Wilhelm Leibniz: Quotes". goodreads.
  2. Ji, Shanyu. "Apollonius and Conic Sections" (PDF). Archived from the original (PDF) on 2021-12-02. பார்க்கப்பட்ட நாள் 2023-04-13.
  3. தமயந்தி பாக்கியநாதன், என், (2003), கணிதம் கற்பித்தல், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, ப. 28
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்போலோனியஸ்&oldid=3905167" இலிருந்து மீள்விக்கப்பட்டது