உள்ளடக்கத்துக்குச் செல்

அப்துல் கரீம் அப்பாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்துல் கரீம் அப்பாசி
Abdul Karim Abbasi
வங்காளதேசம் நாடாளுமன்றம்
நெட்ரோகோனா-1
பதவியில்
28 அக்டோபர் 2001 – 27 அக்டோபர் 2006
முன்னையவர்இயலால் உத்தீன் தலுக்தர்
பின்னவர்முசுடாக்கு அகமத் ரூகி
பதவியில்
5 மார்ச்சு 1991 – 30 மார்ச்சு 1996
முன்னையவர்சிராச்சுல் இசுலாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 திசம்பர் 1938 (1938-12-15) (அகவை 86)
நெட்ரகோனா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
அரசியல் கட்சிமுற்போக்கு சனநாயக கட்சி
துணைவர்அமீதா பேகம்
பிள்ளைகள்5
பெற்றோர்
  • முகமது அப்பாசு அலி (தந்தை)
  • உரோப்சன் (தாய்)
முன்னாள் மாணவர்தாக்கா பல்கலைக்கழகம்
பணிபிடில் கலைஞர்

அப்துல் கரீம் அப்பாசி (Abdul Karim Abbasi) வங்காளதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவரது இயற்பெயர் சர்பராசு உசைன் என்பதாகும். 1938 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] ஒரு மூத்த வழக்கறிஞரான இவர் முன்னாள் கொறடாவாகவும் நெட்ரோகோனா-1 தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அறியப்படுகிறார்.[2]

தொழில்

[தொகு]

1991, 1996 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில், வங்காளதேச தேசியவாதக் கட்சியின் வேட்பாளராக அப்துல் கரீம் அப்பாசி நெட்ரோகோனா-1 தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 2006 ஆம் ஆண்டில், இவர் முற்போக்கு சனநாயகக் கட்சியில் சேர்ந்து கட்சியின் மூத்த துணைத் தலைவரானார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "প্রখ্যাত ব্যক্তিত্ব". Government of Bangladesh Portal. Retrieved 2023-09-02.
  2. "Election-2007". The Daily Star. http://archive.thedailystar.net/2006/10/12/d610120702103.htm. 
  3. "Parliament Election Result of 1991, 1996, 2001 Bangladesh Election Information and Statistics". Vote Monitor Networks. Archived from the original on 29 December 2008. Retrieved 19 October 2019.
  4. "LDP leaders flee houses amid BNP attacks". bdnews24.com. 25 October 2006. https://bdnews24.com/politics/ldp-leaders-flee-houses-amid-bnp-attacks. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_கரீம்_அப்பாசி&oldid=4221646" இலிருந்து மீள்விக்கப்பட்டது