அப்சரா திரையரங்கம்
முகவரி | கோழிக்கோடு இரயில் நிலையம் அருகேயுள்ள இணைப்புச் சாலை கோழிக்கோடு, கேரளம், இந்தியா |
---|---|
இருக்கை எண்ணிக்கை | 1013 |
திறக்கப்பட்டது | 8 ஆகத்து 1971 |
மூடப்பட்டது | 28 சூன் 2023 |
ஆண்டுகள் செயலாக்கம் | 1971–2023 |
அப்சரா திரையரங்கம் (Apsara Theatre) இந்தியாவின் தென்னிந்திய மாநிலமான கேரளாவிலுள்ள கோழிக்கோடு நகரத்தில் அமைந்துள்ளது. 1971 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை இத்திரையரங்கம் இயங்கி வந்தது.[1] கோழிக்கோடு இரயில் நிலையம் அருகே இணைப்புச் சாலையில் இத்திரையரங்கம் அமைந்திருந்தது . 1013 இருக்கைகளுடன் இருந்த அப்சரா திரையரங்கம் கேரளாவின் மிகப்பெரிய திரையரங்குகளில் ஒன்றாகும். இத்திரையரங்கம் கோழிக்கோட்டின் பாரம்பரிய அடையாளமாகவும் இருந்தது. [2]
கண்ணோட்டம்
[தொகு]அப்சரா திரையரங்கம் 8 ஆகஸ்ட் 1971 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 8 ஆம் தேதியன்று மலையாள நடிகர்களான பிரேம் நசீர் மற்றும் சாரதா ஆகியோரால் திறக்கப்பட்டது. ஒரு குடும்பத்திற்குச் சொந்தமான இந்த திரையரங்கம் தொம்மன் இயோசப் கொச்சுப்புரைக்கால் என்பவரால் நிறுவப்பட்டது. 70.70 மிமீ திரையுடன் இத்திரையரங்கம் திறக்கப்பட்ட நேரத்தில், அப்சரா திரையரங்கம் கேரளாவின் மிகப்பெரிய குளிரூட்டப்பட்ட திரையரங்கம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. [3] கேரளாவில் 1000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்ட சில திரையரங்குகளில் இதுவும் ஒன்றாகும். அப்சராவில் திரையிடப்பட்ட முதல் திரைப்படம் ஏ வின்சென்ட் இயக்கிய அபிசாத்யம் திரைப்படமாகும். 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அப்சரா திரையரங்கம் மூடப்படுவதை எதிர்கொண்டதாக தகவல்கள் வெளிவந்தன. [4] மேலும் பல்திரை திரையரங்குகளின் வருகையால், ஒற்றைத் திரை திரையரங்குகள் இயக்குவது நிதி ரீதியாக இலாபகரமாக இல்லை. சூன் மாதம் 28 ஆம் தேதியன்று திரிசங்கு திரைப்படத்தை திரையிட்டு அப்சரா தனது கடைசி காட்சியை நடத்தியது. இது கேரளாவின் மிகப்பெரிய திரையரங்குகளில் ஒன்றாகவும், கோழிக்கோட்டில் உள்ள மிகப்பெரிய ஒற்றைத் திரையரங்கமாகவும் இருந்தது. [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kozhikode's iconic Apsara Theatre finally draws curtains" (in ஆங்கிலம்). 2023-05-30. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
- ↑ "It's 'The End' for Apsara, Kozhikode's biggest single-screen theatre". பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
- ↑ "Apsara, a reminder of plight of single-screen theatres and cinema-owners" (in en-IN). 2023-06-03. https://www.thehindu.com/news/national/kerala/apsaras-closure-a-reminder-of-plight-of-single-screen-theatres-and-cinema-owners/article66927445.ece.
- ↑ Ramachandran, Arjun (2023-06-04). "As Iconic Apsara Theatre in Kozhikode rings down the curtain, nostalgia time for film lovers" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
- ↑ ലേഖകൻ, മാധ്യമം (2023-05-31). "കോഴിക്കോടിന്റെ ഓർമച്ചെപ്പിലേക്ക് കുടിയേറി അപ്സര തിയറ്റർ | Madhyamam" (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.