அபு நசீர் துறைமுகம்
பரா
Farah فراه | |
---|---|
Map of Afghanistan with Farah highlighted | |
ஆள்கூறுகள் (Capital): 32°30′N 63°30′E / 32.5°N 63.5°E | |
Country | ஆப்கானித்தான் |
Capital | Farah |
அரசு | |
• ஆளுநர் | நூர் முகமது ரொகானி[1] |
• துணை ஆளுநர் | சிகாதியர் சாகிபு[1] |
• முதன்மை காவல்துறை அலுவலர் | சாகிப் மசூம்[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 48,470.9 km2 (18,714.7 sq mi) |
மக்கள்தொகை (2021)[2] | |
• மொத்தம் | 5,73,146 |
• அடர்த்தி | 12/km2 (31/sq mi) |
நேர வலயம் | ஒசநே+4:30 (ஆப்கானித்தான் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | AF-FRA |
ஆப்கானித்தானின் மொழிகள் | Dari |
அபு நசீர் துறைமுகம் (Abu Nasir Port) மேற்கு ஆப்கானித்தானின் பரா மாகாணத்தின் சிப் கோ மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் உலர் துறைமுகமாகும். ஆப்கானித்தான்-ஈரான் எல்லைக்கு அடுத்ததாக ஓர் எல்லைக் கட்டுப்பாட்டு புள்ளியாகவும் இத்துறைமுகம் திகழ்கிறது.[3] சேக் அபு நசீர் பராகி என்ற பெயராலும் இத்துறைமுகம் அறியப்படுகிறது. ஈரானில் உள்ள மகிருத் கிராமத்திலிருந்து தரை வழியாக நுழைவதற்கான அதிகாரப்பூர்வ துறைமுகமாகவும் இது சிறப்பு பெற்றுள்ளது. . ஆப்கானித்தானின் பொருளாதாரத்தில் அபு நசீர் துறைமுகம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் கணிசமான அளவு தேசிய வர்த்தகம் இதன் வழியாக செல்கிறது.
ஆப்கானித்தானின் முக்கிய போக்குவரத்தும், கப்பல் வழி வணிகமும் நடைபெறும் பெறும் தளங்களில் இத்துறைமுகமும் ஒன்றாகும்.[4][5] ஆப்கானித்தானின் பரா நகரைச் சேர்ந்த 13 ஆம் நூற்றாண்டின் அபு நாசர் பராகியின் நினைவாக துறைமுகத்திற்கு இப்பெயர் பெயரிடப்பட்டது. ஆப்கானித்தான் அரசாங்க அலுவலகங்கள் உட்பட பல வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் இத்தளத்தில் அமைந்துள்ளன. அபு நசீர்-பரா நெடுஞ்சாலை எல்லை வாசலில் தொடங்கி 130 கிலோமீட்டருக்குப் பிறகு இணைகிறது. கிழக்கில் பரா நகருக்கு அருகில் காந்தகார்-எரத் நெடுஞ்சாலையுடன் .[6] மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசியாவை மத்திய கிழக்குடன் இணைக்கும் மூன்று முக்கியமான வர்த்தக வழிகளில் இதுவும் ஒன்றாகும்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "د نږدې شلو ولایاتو لپاره نوي والیان او امنیې قوماندانان وټاکل شول". 7 நவம்பர் 2021.
- ↑ "Estimated Population of Afghanistan 2021-22" (PDF). National Statistic and Information Authority (NSIA). April 2021. Archived from the original (PDF) on ஜூன் 24, 2021. பார்க்கப்பட்ட நாள் June 21, 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Clark, Kate (July 16, 2021). "Menace, Negotiation, Attack: The Taleban take more District Centres across Afghanistan". Afghanistan Analysts Network. பார்க்கப்பட்ட நாள் 2023-02-07.
- ↑ "$33M Lost in Customs Revenue in Past Month: MoF". TOLOnews. July 26, 2021. https://tolonews.com/business-173759.
- ↑ "Analysts Predict Decrease in Govt Revenue as Border Town Falls". TOLOnews. August 7, 2021. https://tolonews.com/afghanistan-174055.
- ↑ "Officials visit 'Sheikh Abu Nasr Farahi' Highway Reconstruction Work". Bakhtar News Agency. May 29, 2022. https://bakhtarnews.af/en/officials-visit-sheikh-abu-nasr-farahi-highway-reconstruction-work/.
- ↑ "China stresses on reviving 'Silk Road' in Afghanistan". Ariana News. May 8, 2016. https://www.ariananews.af/china-stresses-on-reviving-silk-road-in-afghanistan/.