உள்ளடக்கத்துக்குச் செல்

அபு சயாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபு சயாப் (ஆங்கிலம்: Abu Sayyaf, அரபி: جماعة أبو سياف‎) என்பது ஆயுதம் தாங்கிய இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பு ஆகும்.[1] இவ்வமைப்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் செயல்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக பிலிப்பைன்ஸின் ஜோலோ மற்றும் பாஸிலான் பகுதிகளில் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. இக்குழுவின் நோக்கம் இப்பகுதிகளில் இஸ்லாமியக் கலிபா ஆட்சியை நிறுவுவதாகும்.[2] இவ்வியக்கத்தின் பெயரான அபு சயாப் அன்பது அரபி மொழிச் சொல்லாகும். இதற்கு வாள்வீரனின் தந்தை எனப் பொருள்.[3]

பிலிப்பைன்ஸிலிருந்து தங்கள் பகுதியை பிரித்துத் தனி இஸ்லாமிய ஆட்சிப் பகுதியாக மாற்ற வேண்டும் என்பதற்காக இக்குழுவானது 1991 ஆம் ஆண்டிலிருந்து குண்டுவெடிப்பு, ஆட்கடத்தல், படுகொலை செய்தல், போதைப் பொருள் கடத்தல், கற்பழிப்பு, குழந்தைப் பாலியல் நடவடிக்கைகள் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் ஆகிய தீவிரவாதச் செயல்களைச் செய்துவருகிறது.[4][5] பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் ஈரானிய பாணியிலான இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும் எனபது இதன் நோக்கமாகும்.[6] இவ்வியக்கம் தனது தீவிரவாதச் செயல்களுக்கு அதிநவீன ஆயுதங்களையும், நவீன வெடி பொருட்களையும் பயன்படுத்துகிறது.

தடை

[தொகு]

இக்குழுவின் தீவிரவாதச் செயல்களுக்காக அமெரிக்கா இக்குழுவை தீவிரவாதக் குழு என அறிவித்து இதை தடை செய்துள்ளது.[2][7] 2002 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்கா இக்குழுவினரையும் தாக்கியது அதில் இக்குழுவினரின் முக்கிய தலைவர்கள் அமெரிக்காவின் சி.ஐ.ஏவால் கொல்லப்பட்டனர்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rommel Banlaoi. "Al Harakatul Al Islamiyah: Essays on the Abdu Sayyaf Group" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-06-11. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. 2.0 2.1 "Abu Sayyaf Group (ASG)". MIPT Terrorism Knowledge Base. பார்க்கப்பட்ட நாள் September 20, 2006.
  3. FBI Updates Most Wanted Terrorists and Seeking Information – War on Terrorism Lists, FBI national Press Release, February 24, 2006
  4. Martin, Gus (2012). Understanding Terrorism: Challenges, Perspectives, and Issues. Sage Publications. p. 319.
  5. Rommel C. Banlaoi. "Abu Sayyaf Group: From Mere Banditry to Genuine Terrorism".
  6. Kerry Lynn Nankivell/James Boutilier (2007): South East Asia and Global Terror, in: Christopher Ankersen (ed.): Understanding Global Terror, Cambridge, UK: Polity Press, p. 116
  7. Flashpoint, No bungle in the jungle, armedforcesjournal.com, archived from the original on அக்டோபர் 21, 2007, பார்க்கப்பட்ட நாள் November 1, 2007
  8. "2 US Navy men, 1 Marine killed in Sulu land mine blast". GMA News. September 29, 2009 இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 2, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091002030114/http://www.gmanews.tv/story/173383/2-us-navy-men-1-marine-killed-in-sulu-land-mine-blast. பார்த்த நாள்: September 29, 2009. "Two US Navy personnel and one Philippine Marine soldier were killed when a land mine exploded along a road in Indanan, Sulu Tuesday morning, an official said. The American fatalities were members of the US Navy construction brigade, Armed Forces of the Philippines (AFP) spokesman Lt. Col. Romeo Brawner Jr. told GMANews.TV in a telephone interview. He did not disclose the identities of all three casualties."  and
    Al Pessin (September 29, 2009). "Pentagon Says Troops Killed in Philippines Hit by Roadside Bomb". Voice of America. http://www.voanews.com/english/news/a-13-2009-09-29-voa12.html. பார்த்த நாள்: January 12, 2011.  and
    "Troops killed in Philippines blast". Al Jazeera. September 29, 2009 இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 3, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091003002858/http://english.aljazeera.net/news/asia-pacific/2009/09/20099298614751808.html. பார்த்த நாள்: September 29, 2009.  and
    Jim Gomez (September 29, 2009). "2 US troops killed in Philippines blast". CBS News இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 2, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110202201004/http://www.cbsnews.com/stories/2009/09/29/world/main5348332.shtml. பார்த்த நாள்: January 12, 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபு_சயாப்&oldid=3582431" இலிருந்து மீள்விக்கப்பட்டது