அன்பில் பி. தர்மலிங்கம்
அன்பில் பி. தர்மலிங்கம் | |
---|---|
பட்டம் | திராவிட முன்னேற்றக் கழக நிறுவன உறுப்பினர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
பிள்ளைகள் | அன்பில் பொய்யாமொழி, அன்பில் பெரியசாமி |
அன்பில் பி. தர்மலிங்கம் (Anbil P. Dharmalingam), இந்திய மாநிலமான, தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார்.[1] இவர் தமிழக அமைச்சரவையில், அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
அரசியல்
[தொகு]திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான அன்பில் பி. தர்மலிங்கம், 1967இல் திமுக ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தர்மலிங்கம் உள்ளாட்சி நிர்வாக அமைச்சராகவும் மற்றும் வேளாண் அமைச்சராகவும் பணியாற்றினார்.[2][3] 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில், வட ஆற்காடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பேரணியில், தர்மலிங்கமும் மற்ற ஐந்து அமைச்சர்களும் தலைமை தாங்கினர், ஒரு சுயாதீன தமிழகத்தை உருவாக்குவது, திமுகவின் நோக்கம் என்று அறிவித்தார்.[4][5]
போட்டியிட்ட தேர்தல்கள்
[தொகு]1962 மற்றும் 1980 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், லால்குடி தொகுதியில் இருந்தும், 1971 தேர்தலில், திருச்சிராப்பள்ளி - II தொகுதியிலிருந்தும், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][7][8]
குடும்பம்
[தொகு]இவரது தந்தை பெரியசாமி நாட்டார், தாயார் ஆச்சிக்கண்ணு அம்மையார். மனைவி தங்கப்பொன்னு, இவரது மகன்களான அன்பில் பெரியசாமி மற்றும் அன்பில் பொய்யாமொழி ஆகியோர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இருந்து, தமிழக சட்டமன்றத்தில் பணியாற்றியுள்ளனர்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ramanujan, K. S. (1971). Challenge and Response: An Intimate Report of Tamil Nadu Politics, 1967-1971. Sundara Prachuralayam. p. 216.
- ↑ All India Council of Mayors (1973). Proceedings. p. 72.
- ↑ The Indian Journal of Social Work. Tata Institute of Social Sciences. 1956. p. 183.
- ↑ Ralhan, O. P. (2002). Encyclopaedia of Political Parties. Anmol Publications PVT. LTD. p. 238. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8174888659, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7488-865-5.
- ↑ Indian Institute of Applied Political Research (1974). The Annual Register of Indian Political Parties. Orientalia. p. 695.
- ↑ "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2020-07-13.
- ↑ "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2020-07-13.
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2020-07-13.
- ↑ "CM announces candidates for two seats". The Hindu. 29 January 2000 இம் மூலத்தில் இருந்து 29 நவம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041129201921/http://www.hinduonnet.com/thehindu/2000/01/29/stories/04292232.htm.