அன்பின்நகரம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அன்பின்நகரம் (Anbinnagaram) என்பது தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம் முதலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிறிய கிராமப் பகுதியாகும். போதகர். சி. டி. இ. ரேனியஸ் அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த ஊரில் நான்கு தெருக்கள் மட்டுமே இருக்கின்றன.
மக்கள்
[தொகு]இந்த ஊரில் வசிப்பவர்கள் அனைவரும் கிறித்தவ சமயத்தைச் சார்ந்தவர்கள். விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட இந்த ஊரின் கிழக்குப் பகுதியில் கருமேனி ஆற்று ஓடை உள்ளது. இந்த ஓடையில் மழைக்காலங்களில் மட்டுமே நீர் ஓடுகிறது.
ஆலய விழாக்கள்
[தொகு]இவ்வூரின் ஆலய பிரதிஷ்டை பண்டிகை பெரிய வாரத்திலும், கோபுர பிரதிஷ்டை பண்டிகை மே மாத முதல் வாரத்திலும் நடைபெறும்.