அன்னெட்டி பெர்கூசன்
அன்னெட்டி பெர்கூசன் (Annette Ferguson) ஒரு சுகாட்டிய நோக்கீட்டு வானியலாளர் ஆவார். இவர் பால்வெளி படிமலர்ச்சியில் புலமை வாய்ந்தவர். இவர் எடின்பர்கு வானியல் நிறுவனப் பேராசிரியர் ஆவார்.
இவர் பால்வழி அமைப்புகளின் தோற்றத்தையும் படிமலர்ச்சியையும் அறிய, அண்மையில் உள்ள பால்வெளிகளின் விண்மீன்களையும் உடுக்கணவெளித் தூசுகளையும் ஆய்வதில் கவனத்தைக் குவித்துள்ளார். பெரும்பாலான அவரது அண்மைக்கால ஆய்வுகள் ஆந்திரமேடா எனும் மிக அருகில் அமைந்த சுருளிப் பால்வெளி ஆய்வில் அமைந்துள்ளன. இவர் தன் ஆய்வுக்குக் கவாய், சிலி, கானரித் தீவுகள் ஆகிய இடங்களில் அமைந்த தொலைநோக்கிகளையும் அபுள் விண்வெளித் தொலைநோக்கி யில் உள்ள கருவிகளையும் பயன்படுத்துகிறார்.
இவர் இசுகாட்லாந்தியர் ஆவார்; இவர் டொராண்டோ பலகலைக்கழகத்தில் இயற்பியலிலும் வானியலிலும் இளவல் பட்டத்தையும் பால்டிமோர், மேரிலாந்தில் உள்ள ஜான் ஆப்கின்சு பலகலைக்கழகத்தில் முனைவர் பட்ட்த்தையும் பெற்றார். இவர் முன்பு, கேம்பிரிட்ஜ் வானியல் நிறுவனத்திலும் நெதர்லாந்து, குரோனிங்கனில் உள்ள காப்தேயன் வானியல் நிறுவனத்திலும் முதுமுனைவர் ஆய்வுநலகையைப் பெற்றிருந்ததோடு, செருமனி, கார்ச்சிங்கில் உள்ள மேக்சு பிளாங்கு வானியற்பியல் நிறுவனத்தின் மரீ கியூரி முதுமுனைவர் ஆய்வுறுப்பினராகவும் இருந்துள்ளார்.[1]
தகைமைகளும் விருதுகளும்
[தொகு]இவர் 2003 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது பெற்றார். மேலும், 20016 மார்ச்சில் எடின்பர்கு அரசு கழகத்திலும் சுகாட்லாந்து தேசிய அறிவியல், எழுத்து கழகத்திலும் ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ferguson, Annette. "Personal Web Page". பார்க்கப்பட்ட நாள் 2007-11-09.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-10-08. பார்க்கப்பட்ட நாள் 2017-12-20.