உள்ளடக்கத்துக்குச் செல்

அன்னா லிசியன்ஸ்காயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்னா லிசியன்ஸ்காயா (Anna Lisyanskaya, பிறப்பு ஹன்னா ஹ்ரிஹோரிவ்னா லிசியன்ஸ்கா, 1 நவம்பர் 1917 - 2 திசம்பர் 1999) என்பவர் யூத வம்சாவளியைச் சேர்ந்த உக்ரேனிய மற்றும் உருசிய நாடக, திரைப்பட நடிகை ஆவார்.

துவக்ககால வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

ஹன்னா லிசியன்ஸ்கா 1917, நவம்பர், முதல் நாளன்று மைக்கோலைவ் நகரில் ஒரு நாடக குடும்பத்தில் பிறந்தார்.[1] இவரது தந்தை, ஹிர்ஷ் லிசியான்ஸ்கி, மைக்கோலைவ் யூத நாடகக் குழுவின் தலைவராக இருந்தார்.[1] தாய் சோபியா டிஷ்லிஸ் மற்றும் உடன்பிறந்த சகோதரி டோரா லிசியன்ஸ்கா ஆகியோர் 1913 முதல் இந்த நாடகக் குழுவின் நடிகைகளாக இருந்துள்ளனர். 1920 களின் முற்பகுதியில், யாகோவ் ஸ்வெர்ட்லோவ் பெயரிலான தொழிலாளர் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் லிசியான்ஸ்கி குடும்பம் நிகழ்த்தியது. மேலும் சிறுவயது லிஸ்யான்ஸ்கா ஏற்கனவே ஆறு வயதில் மைகோலேவ் யங் ஸ்பெக்டேட்டர்ஸ் தியேட்டரின் மேடையில் தோன்றத் தொடங்கினார்.[2]

1932 முதல் 1936 வரை, இவர் கீவ் யங் ஸ்பெக்டேட்டர்ஸ் நாடக அரங்கில் உள்ள நாடகத் தளத்தில் பயின்றார்.[1] 1935 ஆம் ஆண்டில், லிசியன்ஸ்கா உக்ரேனிய சோவியத் சோசலிசக் குடியரசின் ஸ்டேட் தியேட்டர் ஆஃப் மியூசிகல் காமெடியில் பணிபுரிந்தார் (இப்போது தி கீவ் ஓபரெட்டா தியேட்டர்).

தொழில்

[தொகு]

1936 ஆம் ஆண்டு, லிசியன்ஸ்கா மைக்கோலைவ் நகருக்கு வந்து சேர்ந்தார். அங்கு இவர் 1938 வரை தியேட்டர் ஆஃப் தி யங் ஸ்பெக்டேட்டரில் பணியாற்றினார். அங்கு ஷாலோம் அலிச்செமின் கதைகளை அடிப்படையாகக் கொண்ட நாடகத் தயாரிப்புகளில் லிஸ்யான்ஸ்காயா நடித்தார். பின்னர் அவர் தனது வாழ்க்கையின் கடைசி காலக்கட்டத்தில் மீண்டும் இந்த பாத்திரங்களில் நடிக்க வந்தார்.

லிசியன்ஸ்காவை கீவைச் சேர்ந்த இயக்குநர் மைக்கோலா மகரென்கோ கவனித்தார்.1938 ஆம் ஆண்டில், இவர் கீவ் மோலோடி நாடகக் குழுவிற்கு அழைக்கப்பட்டார். அங்கு வில்லியம் சேக்ஸ்பியரின் புகழ்பெற்ற சோகக்கதையில் ஜூலியட்டாக, அலெக்சாந்தர் ஆஸ்ட்ரோவ்ஸ்கியின் தி பிராபிட்டபிள் பிளேஸில் யூலென்கா, இவான் துர்கனேவ் எழுதிய எ மன்த் இன் தி கன்ட்ரியில் எலினா மற்றும் பிற பாத்திரங்களில் நடித்தார். இந்த நாடக் குழுவில் நடித்த, இளம் நடிகையான இவரை திரைக்கதை எழுத்தாளர் இஹோர் சாவ்செங்கோ கவனித்தார். அவரின் உதவியால், லிஸ்யான்ஸ்கா 1941 இல் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்படி ஹிரிகோரி ஹிரிச்சர்-செரிகோவரின் இயர்ஸ் ஆஃப் யூத் திரைப்படத்தில் நாஸ்தியா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் (கீவ் ஃபிலிம் ஸ்டுடியோ, அஷ்கபத் ஃபிலிம் ஸ்டுடியோ).[3]

1949 முதல் பின்னர் அலெக்சாண்டர் புஷ்கின் பெயரிடப்பட்ட லெனின்கிராட் அகடாமிக் நாடக அரங்கில் நடிகையாக இருந்தார்.[4] நாடகம், திரைப்படம் தவிர, ஹன்னா லிசியன்ஸ்கா வானொலியிலும், தொலைக்காட்சியிலும் பணியாற்றினார்.[4] 1967 முதல், லிசியன்ஸ்கா லெனின்கிராட் மியூசிகல் காமெடி தியேட்டரின் மேடையில் நிகழ்ச்சி நடத்தத் தொடங்கினார்.[2]

தனது பணிக்காலத்தின் கடைசி ஆண்டுகளில், லிசியன்ஸ்கா மீண்டும் யூத கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். எக்ஸ்பெரிமென்ட் மினியேச்சர் தியேட்டரில், மைக்கைலோ ஸ்வானெட்ஸ்கியின் ஒடேசா வெட்டிங் நாடகத்தை இவர் தயாரித்தார்.[4] 1989 ஆம் ஆண்டில், இவர் தி ஆர்ட் ஆஃப் லிவிங் இன் ஒடெசாவில் ஒரு அத்தையாக நடித்தார், ஒரு ஆண்டு கழித்து - ஐசக் பாபலின் படைப்பின் அடிப்படையில் ஒலெக்சாண்டர் செல்டோவிச் இயக்கிய தி டிக்லைன் திரைப்படத்தில் மேடம் வீனரின் பாத்திரத்திலும், 1991 இல் டிமிட்ரோ அஸ்ட்ராகானின் கெட் தி அவுட் படத்தில் ஒரு பெரிய யூத குடும்பத்தின் தாய் பாத்திரத்தில் நடித்தார்.

1993 ஆம் ஆண்டில், லிசியன்ஸ்கா கடுமையாக நோய்வாய்ப்பட்டார், மேலும் தனது நெருங்கிய தோழியும், நடிகையுமான லிலியன் மல்கினாவின் ஆதரவுடன், இவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து வாழ இஸ்ரேல் சென்றார்.[5] இவரது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகள் அங்கேயே கழிந்தன.

ஹன்னா லிசியன்ஸ்கா 1999, திசம்பர், 2, அன்று ஆரத் நகரில் இறந்தார். அவரது கல்லறையில் உள்ள நினைவுச்சின்னத்தில், உருசிய மற்றும் எபிரேய மொழிகளில் கல்வெட்டுகள் உள்ளன அதில: "நாடக, திரைப்பட நடிகையான ஹன்னா லிசியன்ஸ்காயாவுக்கு ரசிகர்களிடமிருந்து."

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "История звезды из Николаева 20 века: актриса Анна Лисянская - mykolayivchanka.com.ua" (in ரஷியன்). 2022-09-06. பார்க்கப்பட்ட நாள் 2022-12-26.
  2. 2.0 2.1 "Анна Лисянская". Кино-Театр.Ру. பார்க்கப்பட்ட நாள் 2022-12-26.
  3. Лисянська Ганна Григорівна — Енциклопедія Сучасної України. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789660220744. பார்க்கப்பட்ட நாள் 2022-12-26.
  4. 4.0 4.1 4.2 "АННА ЛИСЯНСКАЯ". Народ мой. 16 January 2000. Archived from the original on 17 January 2008. பார்க்கப்பட்ட நாள் 26 January 2022.
  5. "Лисяцкая Анна Григорьевна - биография". Mega-Stars.ru (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னா_லிசியன்ஸ்காயா&oldid=3918732" இலிருந்து மீள்விக்கப்பட்டது