உள்ளடக்கத்துக்குச் செல்

அன்சு ஜம்சென்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்சு ஜம்சென்பா
2017ஆம் ஆண்டுக்கான தென்சிங் நார்கே தேசிய சாகச விருதை ஜம்சென்பாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கியபோது
பிறப்பு31 திசம்பர் 1979 (1979-12-31) (அகவை 45)
பொம்டிலா, மேற்கு காமெங் மாவட்டம், அருணாசலப் பிரதேசம், இந்தியா
தேசியம் இந்தியா
வாழ்க்கைத்
துணை
செரிங் வாங்கே
பிள்ளைகள்2
விருதுகள்தென்சிங் நார்கே தேசிய சாகச விருது
வலைத்தளம்
www.%20anshujamsenpa.com

அன்சு ஜம்சென்பா (Anshu Jamsenpa) என்பவர் இந்திய மலையேறுபவரும் ஒரு பருவத்தில் இரண்டு முறை எவரெசுட்டு சிகரத்தை எட்டிய உலகின் முதல் பெண்மணியும் ஆவார். மேலும் ஐந்து நாட்களுக்குள் இரட்டை சிகரத்தை எட்டிய வேகமான வீரர் ஆவார்.[1][2] இது ஒரு பெண் மிக உயரமான சிகரத்தில் இரட்டை வேகத்தில் ஏறும் இடமாகும். இவர் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தின் தலைமையகமான போம்டிலாவைச் சேர்ந்தவர்.[3] 2021-ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ இவருக்கு வழங்கப்பட்டது.[4][5]

தொழில்

[தொகு]

ஜம்சென்பா 2011-ஆம் ஆண்டு மே 12 -ம் தேதி முதல் முறையாக எவரெசுட்டு சிகரத்தை எட்டினார். மீண்டும் மே 21-ஆம் தேதி இரண்டாவது முறையாக ஏறினார்.[6]

சுர்ஜித் சிங் லீஷாங்தெம் தலைமையிலான 2013 வடகிழக்கு இந்திய எவரெசுட்டு பயணத்தில் 2013-ஆம் ஆண்டு எவரெசுட்டு சிகரத்தில் ஏறினார்.[7][8]

2017-ஆம் ஆண்டில், ஜம்சென்பா ஒரு பருவத்தில் இரண்டு முறை எவரெசுட்டு சிகரத்தில் ஏறிய உலகின் முதல் பெண்மணி ஆனார். மேலும் 5 நாட்களுக்குள் இதனைச் செய்த முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். இது ஒரு பெண்ணால் மிக உயரமான சிகரத்தில் இரட்டை வேகத்தில் ஏறும் இடமாகும். இது இவரது ஐந்தாவது மலையேற்ற நிகழ்வாகும். இதனால் இவர் அதிக முறை மலையேறிய இந்தியப் பெண்மணி ஆனார்.[9][10][11]

14-ஆவது தலாய் லாமாவின் ஆசீர்வாதங்களைப் பெற்ற பிறகு[12] இவர் ஏப்ரல் 2, 2017 அன்று குவகாத்தியிலிருந்து தனது எவரெசுட்டு ஏறும் பயணத்தைத் தொடங்கினார். எவரெசுட்டு அடிப்படை முகாமில் (17,600 அடி உயரத்தில்) தட்பவெப்ப நிலைக்குப் பழகுவதற்கு இவர் 38 நாட்கள் பயிற்சியினை எடுத்துக் கொண்டார். மேலும் ஏப்ரல் 4 அன்று தனது முக்கிய பயணத்தைத் தொடங்கினார். மே 16-ஆம் தேதி காலை 9.15 மணிக்கு, மற்ற 17 மலையேறுபவர்களுடன் சேர்ந்து, இவர் மலை உச்சிக்கு ஏறி இந்தியத் தேசியக் கொடியை ஏற்றினார்.[13]

மே 19 அன்று நேபாள மலையேற்ற வீரர் புரி செர்பாவுடன் தனது இரண்டாவது கடினமான மலையேற்றப் பயணத்தினைத் தொடங்கினார். இரவு 10 மணி வரை கிட்டத்தட்ட எந்த இடைநிறுத்தமும் இல்லாமல் மலையேற்றத்தைத் தொடர்ந்தார். மறுநாள் காலையில், அவர் மீண்டும் மலையேற்றத்தைத் தொடங்கி, சிகரத்தை ஏறுவதற்கு முன்பு ஒரு சிறிய ஓய்வு எடுத்துக்கொண்டு, இறுதியாக 21 மே 2017 அன்று காலை 7.45 மணிக்குச் சிகரத்தை அடைந்தார். இரட்டை ஏற்றம் என்ற இலக்கினை 2011-ஆம் ஆண்டிலேயே தனது பயணத்தில் சேர்க்கப்பட்டிருந்தாலும், இவர் 10 நாட்களுக்குள் இரண்டு முறை (இரண்டாவது மற்றும் மூன்றாவது பயணம்) சிகரத்தில் ஏறினார்.[14] இருப்பினும், இந்த ஆண்டு, நான்காவது பயணத்திற்குப் பிறகு தனது ஐந்தாவது பயணத்தை முடிக்க 118 மணி நேரம் 15 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்.

கௌரவங்களும் விருதுகளும்

[தொகு]

எவரெசெட்டு சிகரத்தில் ஐந்து முறை ஏறிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றதற்காக, (முதல் பெண்மணி மற்றும் இரண்டு முறை இரட்டை ஏறுதல்களை முடித்த முதல் பெண்) வரலாறு படைத்ததற்காக. அருணாச்சலப் பிரதேச அரசு இவரது பெயரை டென்சிங் நோர்கே தேசியச் சாகச விருதுக்குப் பரிந்துரைத்துள்ளது. செப்டம்பர் 25, 2018 அன்று புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் சாகசத்திற்கான ஜம்சென்பாவுக்கு, இந்தியாவின் மிக உயர்ந்த சாகச விருதான டென்சிங் நோர்கே தேசியச் சாகச விருது 2017-ஐ, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்கினார்.[15][16][17]

ஜம்சென்பாவுக்கு 2011 சூன் 30 அன்று புது தில்லியில் சிஎன்என்-ஐபிஎன் இளம் இந்தியத் தலைவர் விருது வழங்கப்பட்டது. இவர் இந்த விருதை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (இந்தியா) ஜோதிர் ஆதித்யா சிந்தியாவிடமிருந்து பெற்றார்.[18]

சூன் 2, 2012 அன்று, குவகாத்தியில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஜம்சென்பாவுக்கு 2011-12-ஆம் ஆண்டின் பெண் சாதனையாளர் விருதினை வழங்கியது.[19]

சனவரி 31, 2017 அன்று, இட்டாநகரின் ஐஜி பூங்காப் பகுதியில் நடைபெற்ற விழாவில், அருணாச்சலப் பிரதேச அரசால் அவருக்கு ஆண்டின் சுற்றுலா தலைமகன் விருது வழங்கப்பட்டது. இதில் ஆளுநர் பத்மநாப ஆச்சார்யா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.[20]

சாகச விளையாட்டுத் துறையில் இவர் செய்த சாதனைகளுக்காகவும், இந்தப் பிராந்தியத்தைப் பெருமைப்படுத்தியதற்காகவும் ஜம்சென்பாவுக்கு அருணாச்சல பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது.[21]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

ஜம்சென்பாவின் கணவர், செரிங் வாங்கே, அருணாச்சல மலையேறுதல் மற்றும் சாகச விளையாட்டு சங்கத்தின் தலைவராக உள்ளார். இந்த இணையருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.[22]

மேலும் காண்க

[தொகு]
  • எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய இந்தியர்கள் - ஆண்டு வாரியாக
  • இந்தியாவின் எவரெஸ்ட் சிகர பதிவுகளின் பட்டியல்
  • எவரெஸ்ட் சிகர பதிவுகளின் பட்டியல்
  • எவரெஸ்ட் சிகரத்தை எத்தனை முறை அடைந்தார்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dr.Anshu Jamsenpa-". www.anshujamsenpa.com.
  2. "Anshu Jamsenpa Becomes The First Woman To Scale Mt Everest Twice In 5 Days-". www.huffingtonpost.in. 22 May 2017.
  3. "Anshu Jamsenpa Becomes The First Woman To Scale Mt Everest Twice In 5 Days-". www.telegraphindia.com. Archived from the original on 23 October 2017.
  4. "Padma Awards 2021 announced". Ministry of Home Affairs. Retrieved 26 January 2021.
  5. "Shinzo Abe, Tarun Gogoi, Ram Vilas Paswan among Padma Award winners: Complete list". https://timesofindia.indiatimes.com/india/shinzo-abe-tarun-gogoi-ram-vilas-paswan-among-padma-award-winners-complete-list/articleshow/80453596.cms. 
  6. "Anshu Jamsenpa summited the tallest mountain in the world on May 12 and May 21 -". www.atlfmonline.com. Archived from the original on 4 September 2019. Retrieved 10 September 2019.
  7. "2013 North East India Everest Expedition -". www.atlfmonline.com.
  8. "2013 North East India Everest Expedition -". www.atlfmonline.com.
  9. "Anshu Jamsenpa Becomes The First Woman To Scale Mt Everest Twice In 5 Days-". www.huffingtonpost.in. 22 May 2017.
  10. "Anshu Jamsenpa Becomes The First Woman To Scale Mt Everest Twice In 5 Days-". www.edition.cnn.com.
  11. "Anshu Jamsenpa Becomes The First Woman To Scale Mt Everest Twice In 5 Days-". www.indiatoday.in.
  12. "Arunachal Pradesh climber Anshu Jamsenpa to scale Mount Everest again". https://timesofindia.indiatimes.com/city/guwahati/arunachal-pradesh-climber-anshu-jamsenpa-to-scale-mount-everest-again/articleshow/58008610.cms. 
  13. "Anshu Jamsenpa Becomes First Indian Woman To Scale Mount Everest 4 Times-". www.ndtv.com.
  14. "Anshu Jamsenpa attempts second ascent to scale Mount Everest-". www.indianexpress.com. 20 May 2017.
  15. "Tenzing Norgay National Adventure Award 2017, India's Highest Adventure Award to Ms. Dr. Anshu Jamsenpa -". www.uniindia.com.
  16. "Tenzing Norgay National Adventure Award 2017, India's Highest Adventure Award to Ms. Dr. Anshu Jamsenpa -". www.arunachaltimes.in.
  17. "Tenzing Norgay National Adventure Award 2017, India's Highest Adventure Award to Ms. Dr. Anshu Jamsenpa -". www.telegraphindia.com.[தொடர்பிழந்த இணைப்பு]
  18. "Young Indian Leader Award 2011 to Ms. Dr. Anshu Jamsenpa -". www.mungpoo.org.
  19. "FICCI Woman Achiever of the Year 2011-12 to Ms. Dr. Anshu Jamsenpa -" (PDF). www.ficciflo.com.
  20. "Dr.Anshu Jamsenpa Awards -". ww.celebrityspeakersindia.com.
  21. "Anshu Jamsenpa conferred with Doctorate Degree-". www.arunachal24.in. 5 February 2018.
  22. "Tsering Wange, the president of the Arunachal Mountaineering and Adventure Sports Association-". www.arunachal24.in. 28 July 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்சு_ஜம்சென்பா&oldid=4213471" இலிருந்து மீள்விக்கப்பட்டது