அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, பழனி
நாள் | 24 மற்றும் 25 ஆகத்து, 2024 |
---|---|
இடம் | அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழனி |
அமைவிடம் | பழனி, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
இணையதளம் | [1] |
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு என்பது முருக பக்தர்களை உலகளவில் ஒருங்கிணைத்து, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 24 ஆகத்து 2024 மற்றும் 25 ஆகத்து 2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற ஒரு மாநாட்டு நிகழ்வு ஆகும்.[1][2]
நோக்கம்
[தொகு]இந்த மாநாட்டினை தமிழக அரசின் இந்து சமய அறநிலைத் துறை ஒருங்கிணைத்துள்ளது. இந்த மாநாட்டின் முதன்மை நோக்கங்களாக முருக வழிபாட்டின் உள்ளுறை நெறிகளை உலகெங்கிலும் பரப்புதல், தத்துவக் கோட்பாடுகளை அனைவரும் அறிய உதவுதல், பக்தர்களை ஒருங்கிணைத்தல், திருமுறைகள், திருப்புகழ், சைவ சித்தாந்த சாத்திரங்களை உலகறிய பரப்புதல் ஆகியன உள்ளன[3].
பயன்கள்
[தொகு]முப்பரிமாண திரையரங்கு, தோற்ற மெய்ம்மை தொழில்நுட்பத்தில் முருக கடவுளின் அறுபடை வீடுகளை தரிசனம் செய்யும் அனுபவம், சமயம் சார்ந்த புத்தகக் கண்காட்சி, பொருட்காட்சி, சிறுவர் சிறுமியர் பாட்டுக் கச்சேரி என சுமார் இரண்டு இலட்சம் பார்வையாளர்கள் பயன்பெற்ற மாநாடாக அமைந்தது.[4]
வெளிநாட்டவர் வருகை
[தொகு]முருக கடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் நடைபெற்ற இம்மாநாட்டில் வெளிநாடுகளிலிருந்தும் முருக பக்தர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் வந்து கலந்து கொண்டனர்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டு நிகழ்ச்சி விவரம் வெளியீடு: இந்து சமய அறநிலையத்துறை தகவல்". தினகரன். 22 August 2024. https://www.dinakaran.com/palani-muthamilmuruganconference-programdetails-publication/. பார்த்த நாள்: 22 August 2024.
- ↑ "பழநியில் கோலாகலமாக நடந்த முத்தமிழ் முருகன் மாநாடு நிறைவு: 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்". Hindu Tamil Thisai. 2024-08-25. பார்க்கப்பட்ட நாள் 2024-08-26.
- ↑ "முத்தமிழ் முருகன் மாநாட்டின் நோக்கம்". muthamizhmuruganmaanadu2024.com. முத்தமிழ் முருகன் மாநாடு 2024. பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
- ↑ E. T. V. Bharat (2024-08-26). "களைகட்டிய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு; குவியும் பொதுமக்கள்! - Palani Muthamil Murugan Conference". ETV Bharat News. பார்க்கப்பட்ட நாள் 2024-08-26.
- ↑ "பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: முதல்வர் தொடக்கிவைத்தார்!". Dinamani. 2024-08-24. பார்க்கப்பட்ட நாள் 2024-08-26.