உள்ளடக்கத்துக்குச் செல்

அனுராதா சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு
அனுராதா சௌத்ரி
Member of உத்தரப் பிரதேச சட்டமன்றம்
பதவியில்
2002–2004
தொகுதிபக்காரா
உத்தரப் பிரதேச மாநில பொதுப் பணித்துறை அமைச்சர்
பதவியில்
2002[1]–2004
பதினான்காவது மக்களவை உறுப்பினர்
பதவியில்
2004–2009
முன்னையவர்அமீர் ஆலம் கான்
பின்னவர்பேகம் தபசம் ஹசன்
தொகுதி[[கைரானா மக்களவைத் தொகுதி |கைரானா]]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 ஆகத்து 1960 (1960-08-29) (அகவை 64)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்முசாபர்நகர்
மூலம்: [1]

அனுராதா சௌத்ரி (Anuradha Choudhary) (பிறப்பு 29 ஆகஸ்ட் 1960) இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள ஓர் அரசியல்வாதி ஆவார். இவர் உத்தரபிரதேசத்தில் அமைச்சராகவும், மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளத்துடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2012 இல் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். பின்னர், 2015 இல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[2]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

2002 இல், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பக்காரா சட்டமன்றத் தொகுதியிலிருந்து உறுப்பினராகி மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சரானார். 2004 ஆம் ஆண்டில் இவர் கைரானா மக்களவைத் தொகுதிக்கான ராஷ்டிரிய லோக் தளத்தின் சார்பில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 மக்களவைத் தேர்தலில் முசாபர்நகர் தொகுதியில் போட்டியிட்டு இவர் தோல்வியடைந்தார். உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் 2012 ஜனவரியில், இவர் ராஷ்டிரிய லோக் தளக் கட்சியிலிருந்து வெளியேறி சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2014 மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் கட்சி பெரும் தோல்வியடைந்த பின்னர் உத்தரப் பிரதேசத்தின் அமைச்சர் பதவியிலிருந்து இவர் நீக்கப்பட்டார், அதன்பிறகு இவர் அக்கட்சியை விட்டும் விலகினார்.[3] ஜனவரி 2015 இல், இவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Yogesh Vajpeyi (2002-10-25). "The Telegraph – Calcutta : Nation". Telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2018-06-08.
  2. 2.0 2.1 "Jat leader Anuradha joins BJP". Tribuneindia.com. 2015-01-25. பார்க்கப்பட்ட நாள் 2018-06-08.
  3. "Anuradha Choudhary quits SP, blames it on Azam". The Indian Express. 2014-05-24. பார்க்கப்பட்ட நாள் 2018-06-08.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதா_சௌத்ரி&oldid=3447413" இலிருந்து மீள்விக்கப்பட்டது