உள்ளடக்கத்துக்குச் செல்

அனுகிரிதி குசேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனுகிரிதி குசேன் (Anukriti Gusain) (பிறப்பு: 1994 மார்ச் 25) [1] ) இவர் ஓர் இந்திய விளம்பர நடிகையும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் மற்றும் பிளானட் பாலிவுட் நியூஸ் என்ற தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளருமாவார். குசேன் மிஸ் ஆசியா பசிபிக் உலக 2014 என்ற அழகுப்போட்டியில் வென்றுள்ளார். மேலும், இந்தியாவில் 2014 இல் நடந்த மிஸ் ஆசியா பசிபிக் உலக [2][3] அழகிப் போட்டியில் சர்வதேச அழகு அலங்கார அணிவகுப்பு நடத்தி அதில் 4வது இடத்தைப் பிடித்தார்.[4][5] தில்லியில் 2013 இல் நடந்த ஃபெமினா மிஸ் இந்தியா என்றப் போட்டியில் கிரீடம் பெற்றார்.[6] மேலும், பிரைட் ஆஃப் தி வேர்ல்ட் இந்தியா 2013ன் வெற்றியாளராகவும் உள்ளார்.[7] உத்தரகண்டம் மாநிலத்தில் நடந்த ஃபெமினா மிஸ் இந்தியா 2017 ஐயும் வென்றார்.[8] இவர் மிஸ் கிராண்ட் இந்தியா 2017 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், வியட்நாமில் நடைபெற்ற மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2017 இல்இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதில் முதல் 20 இடங்களைப் பிடித்தார்.  

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

அனுகிருதி வட இந்திய மாநிலமான உத்தரகண்டம் மாநிலத்தில் உள்ள பௌரி கர்வால் மாவட்டத்தின் லான்ஸ்டவுன் என்ற இடத்தில் பிறந்தார். இவர் கண்டோலி கிராமத்தைச் சேர்ந்தவர். உத்தம் சிங் குசேன் மற்றும் நர்மதா தேவி ஆகியோரின் மூன்று குழந்தைகளில் இவள் முதல் குழந்தையாவார்.[9][10] அனுகிரிதி தனது பள்ளிப்படிப்பை லான்ஸ்டவுனில் உள்ள ராணுவ பொதுப் பள்ளியில் முடித்துள்ளார். தனது பள்ளிப்படிப்பில் சிறந்த உரையாடல் வழங்கும் விருதை வென்றுள்ளார். தேராதூனின் தொழில்நுட்ப நிறுவனத்தில் கணினி அறிவியல் பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார்.

தொழில்[தொகு]

குசேன் தனது வாழ்க்கையை பென்னட், கோல்மன் & கோ லிமிடெட் நிறுவனத்துடன் தொடங்கினார். (பி.சி.சி.எல்) .[11]

பெமினா மிஸ் இந்தியா[தொகு]

2013 திலி, பெமினா மிஸ் இந்தியா போட்டி சர்வதேச அளவில் பங்கேற்பதற்கான ஒரு பிராந்திய போட்டியாகும். இவர் 2013இல் தில்லி பெமினா மிஸ் இந்தியா போட்டியில் வென்றார். பெமினா மிஸ் டைம்லெஸ் பியூட்டி மற்றும் பெமினா மிஸ் க்ளோயிங் ஸ்கின் உள்ளிட்ட இரண்டு துணை பட்டங்களை இவர் வென்றுள்ளார்.

2013 மார்ச் 24 அன்று மும்பையில் நடைபெற்ற பெமினா மிஸ் இந்தியா 2013,[12] 5 இறுதிப் போட்டியாளர்களில் குசேன் ஒருவராவார். மிஸ் இந்தியா 2013 இன் துணைப் போட்டி விருதுகளில் மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல் [13] மற்றும் மிஸ் ஃபோட்டோஜெனிக் [14] ஆகியவற்றுடன் குசேன் தலைப்பிட்டுள்ளார். மிஸ் இந்தியா 2013 இன் துணை போட்டி விருதுகளில் மிஸ் ஃபோட்டோஜெனிக்காகவும், பாண்ட்ஸ் ஃபெமினா மிஸ் இந்தியா டெல்லி 2013 வெற்றியாளராகவும் இருந்தார். பாண்ட்ஸ்சின் ஃபெமினா மிஸ் இந்தியா டெல்லி 2013 இன் கடைசி சுற்றில் 14 இறுதிப் போட்டியாளர்கள் இருந்தனர் .[15] அப்போட்டியில் வென்றதோடு மட்டுமல்லாமல், பி.சி.ஜே ஃபெமினா மிஸ் டைம்லெஸ் பியூட்டி மற்றும் பாண்டின் ஃபெமினா மிஸ் கிளைனிங் ஸ்கின் விருதையும் வென்றார் .

குறிப்புகள்[தொகு]

  1. "The Global Face : Anukriti Gusain". theglobalface portal. Archived from the original on 2015-11-26.
  2. "Grand Finale of POND'S Femina Miss India Delhi 2013". indiatimes.com.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "INTERVIEW, Anukriti Gusain will represent India at Miss Asia Pacific World 2014". Youtube. 23 May 2014.
  4. "Finalists -Anukriti Gusain". Miss Asia Pacific World official website. Archived from the original on 2014-05-13.
  5. "Miss Asia Pacific World anytime in Uttarakhand". amarujala.com. Archived from the original on 2015-11-27. பார்க்கப்பட்ட நாள் 2020-03-25.
  6. "Trending at PFMI". BeBEAUTIFUL Portal.
  7. "Anukriti Gusain to lead India at Bride of The World 2013 Pageant in Taiwan". Biharprabha News. பார்க்கப்பட்ட நாள் 9 November 2013.
  8. "Uttarakhand produces not just great Chief Ministers but also the best beauty queens: Anukriti Gusain". Times Of India. 20 June 2017. பார்க்கப்பட்ட நாள் 23 June 2017.
  9. "Votes sought for Miss India contestant". htsyndication.com. 5 March 2013. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  10. "Anukriti Gusain - Profile". indiatimes.com. Archived from the original on 2013-05-15. பார்க்கப்பட்ட நாள் 2020-03-25. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  11. "Miss India 2013 finalist Anukruti Gusain is the fourth runner-up at Miss Asia Pacific World 2014". Times of India News. 1 June 2014.
  12. "Femina Miss India 2013 Grand Finale". Times of India Portal.
  13. "Anukriti Gusain wins the title of 'Closup Femina Miss Beautiful Smile'". The Times of India.
  14. "Sub-Title 'Femina Miss Photogenic' Anukriti Gusain". The Times of India.
  15. "POND'S Femina Miss India Delhi 2013 WINNERS UNVEILED!". IndiaTimes Portal. Archived from the original on 2013-01-29. பார்க்கப்பட்ட நாள் 2020-03-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுகிரிதி_குசேன்&oldid=3927075" இலிருந்து மீள்விக்கப்பட்டது