அனிதா ராவ் பதாமி
அனிதா ராவ் பதாமி (Anita Rau Badami பிறப்பு: செப்டம்பர் 24, 1961) ஓர் இந்திய-கனடிய எழுத்தாளர். இந்தியாவின் ஒடிசாவின் ரூர்கேலாவில் பிறந்த இவர் சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் மும்பையில் சோபியா பாலிடெக்னிக் ஆகியவற்றில் கல்வி பயின்றார். இவர் 1991 இல் கனடாவுக்கு குடிபெயர்ந்தார் , கல்கரி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவரது முதல் புதினம் தாமரிண்ட் மெம் (1997) ஆகும்.
இவரது புதினங்கள் இந்திய குடும்ப வாழ்க்கையின் சிக்கல்களையும், இந்தியர்கள் மேற்கு நோக்கி நகரும்போது வெளிப்படும் கலாச்சார இடைவெளியையும் கையாளுகின்றன.
பாதாமியின் மூன்றாவது புதினமான கேன் யூ ஹியர் தி நைட் பேர்ட் கால் புளூஸ்டார் நடவடிக்கை மற்றும் ஏர் இந்தியா குண்டுவெடிப்பு ஆகியன குறித்து ஆராய்கிறது.
2017 ஆம் ஆண்டில், பாடாமி 2017 ஸ்கொட்டியாபங்க் கில்லர் பரிசு நடுவர் மன்றத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டார். [1]
நூலியல்
[தொகு]- தாமரிண்ட் மெம் - 1997பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-670-86916-3 (அமெரிக்க தலைப்பு: தாமரிண்ட் வுமன் - 2002)
- ஹீரோஸ் வாக் - 2001பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-676-97225-X
- கேன் யூ ஹியர் தெ நைட்பேர்ட் கால்? - 2006பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0676976052
- டெல் இட் டூ தெ ட்ரீஸ்- 2011பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0676978940
சான்றுகள்
[தொகு]- ↑ "Introducing the 2017 Scotiabank Giller Prize Jury". Scotiabank Giller Prize, January 16, 2017.