அனிதா அசோக் டத்தர்
அனிதா அசோக் டத்தர் (Anita Ashok Datar ) என்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண்மணி. உலகின் வறிய, பின் தங்கிய நாடுகளில் 18 ஆண்டுகளாகப் பயணம் செய்து அந்நாட்டு மக்களின் சுகாதாரம், கல்வி ஆகிய தளங்களில் பணியாற்றியவர்.[1][2]
பின்புலமும் பணிகளும்
[தொகு]அனிதாவின் தந்தை மகாராட்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்தவர். தாய் மும்பையைச் சேர்ந்தவர்.[3] 1960 களில் அவர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். எனவே அனிதா அமெரிக்காவில் பிறந்தார். நியூ ஜெர்சியில் வளர்ந்த அனிதா தம் மகனுடன் வசித்து வந்தார். பன்னாட்டு நிறுவனமான பல்லாடியம் என்னும் பெருங் குழுமத்தில் பணியாற்றினார். எத்தியோப்பியா, கென்யா, நைசீரியா, தெற்கு சூடான், தான்சானியா, சாம்பியா, கவுதமாலா, கயானா, வங்கதேயம், இந்தியா போன்ற நாடுகளில் பயணம் செய்து அங்குள்ள மக்களின் உடல் நலம், கல்வி நிலைகள் பற்றி நேரடியாக அறிந்து உதவிகள் செய்தார். குடும்பக் கட்டுப்பாடு, எச்.ஐ.வி. நோய்கள் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்தார்.
இறப்பு
[தொகு]அய். எஸ். வன்முறையாளர்கள் மாலி என்னும் ஊரில் ஒரு விடுதியில் தாக்குதல் நடத்தியபோது இருபது பேர் கொல்லப்பட்டார்கள். அந்தத் தாக்குதலில் பலியானவர்களில் அனிதா அசோக் டத்தரும் ஒருவர். இக் கொடூரம் உலக அரங்கில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "About Anita – Anita Datar" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-02-16.
- ↑ "Indian-American killed in Mali worked to improve global health". தி இந்து (in Indian English). 2015-11-21. Retrieved 2025-02-16.
- ↑ "Anita Datar's mother is from Mumbai, dad from Pune". The Times of India. 2015-11-22. Retrieved 2025-02-16.