அனஸ்தாசியுஸ் ஹார்ட்மன்
அனஸ்தாசியுஸ் ஹார்ட்மன் Anastasius Hartmanna | |
---|---|
வணக்கத்துக்குரியவர் | |
பிறப்பு | அல்த்விஸ், சுவிட்சர்லாந்து | பெப்ரவரி 24, 1803
இறப்பு | ஏப்ரல் 24, 1866 பாட்னா-குரிஜீ, இந்தியா | (அகவை 63)
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்கம் |
அனஸ்தாசியுஸ் ஹார்ட்மன் (Anastasius Hartmann, 24 பெப்ரவரி 1803 - 24 ஏப்ரல் 1866) வட இந்தியாவில் சிறப்பாக நற்செய்தி பணியாற்றிய சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்க ஆயர் ஆவர்.[1][2][3]
இவர் சுவிட்சர்லாந்து நாட்டில் அல்த்விஸ் என்ற ஊரில் 1803 பெப்ரவெரி 24 இல் பிறந்து சொலொதுர்னில் கல்விபயின்று கப்புச்சின் சபையில் இணைந்து 1825 இல் குருவானார். மெய்யியல் மற்றும் இறையியலில் பட்டம் பெற்று பேராசிரியராக பணியாற்றினார். 1843 இல் இந்தியா வந்து மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் நகரில் தனது மறைப்பரப்பு பணியை தொடங்கினார். 1845 இல் திருத்தந்தை பதினாறாம் கிரகோரியாரால் பாட்னாவின் ஆயராக நியமிக்கப்பட்டார். 1849 முதல் 1858 வரை மும்பை மறைமாவட்டத்தின் பொறுப்பு ஆயராகவும் செயல்பட்டார். பாட்னா முதல் மும்பை வரை கொண்ட மிகப்பெரிய நிலப்பரப்பில் அடிக்கடி மாட்டுவண்டியில் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து சிறப்பான நற்செய்திபணி ஆற்றினார். பல துறவற சபைகளின் உதவியுடன் புதிய ஆலயங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள், மக்கள் நல்வாழ்வு இல்லங்கள் என அமைத்து புதிய உத்திகளைக் கையாண்டு மறைபணியில் வளர்ச்சிக்கண்டார். இந்தி மொழியில் புதிய ஏற்பாடு மற்றும் மறைக்கல்வி நூல்கள் உருவாக பெரிதும் உதவி பல அரியசாதனைகள் செய்தார். பாட்னாவின் பழைய மறைமாவட்ட பேராலயத்தை எழுப்பிய பெருமைக்குரியவர். தனது ஆயர் பணிவாழ்வில் தொடர்ந்து பலவிதமான இன்னல்களுக்கு உள்ளனர் ஆனால் மனம்தளராமல் நிறைவான பணியை ஆற்றி மக்களால் "புனித ஆயர்" எனப் போற்றப்பட்டார். பீகார் மாநிலம் பாட்னா-குரிஜீயில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு 1866 ஏப்ரல் 24 இல் மரித்தார். ஆயர் அனஸ்தாசியுஸ் ஹர்ட்மன் வணக்கத்துக்குரியவர் என திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1991 டிசம்பர் 21 இல் அறிவித்தார். இவரது புனிதர் பட்டத்துக்கான பணிகளை பாட்னா உயர் மறைமாவட்டம் மேற்கொண்டுள்ளது.
சான்றுகள்
[தொகு]- capuchinfriars.org.au பரணிடப்பட்டது 2013-04-09 at the வந்தவழி இயந்திரம்
- Catholic Encyclopedia
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Servants of God from the Latin – Catholics Indian". catholicsindia.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-14.
- ↑ "list of capuchins saints-blesseds". capuchins.org. Archived from the original on 2018-07-04. பார்க்கப்பட்ட நாள் 2018-09-14.
- ↑ "Diocese Of Allahabad". www.dioceseofallahabad.org. பார்க்கப்பட்ட நாள் 2018-09-14.