அனந்தபூர் போர் (1682)
அனந்தபூர் போர் (Battle of Anandpur) குரு கோவிந்த் சிங் தலைமையிலான சீக்கியப் படைகளுக்கும், பீம் சந்த் (கஹ்லூர்) தலைமையிலான கலூர் படைகளுக்கும் போர் நடைபெற்றது. குரு கோவிந்த் சிங் நடத்திய முதல் போர் இதுவாகும்.
பின்னணி மற்றும் போர்
[தொகு]கலூரின் ஆட்சியாளரான பீம் சந்த், தனது தலைநகருக்கு அருகில் பெரிய அளவில் சீக்கியர்களின் கூட்டங்கள் மற்றும் போர் போன்ற நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. [1] இறையாண்மையின் அடையாளமான பல விடயங்களை குரு கோவிந்தன் செய்தது அவருக்குப் பிடிக்கவில்லை. [2] இந்த நடைமுறைக்கு அரசர் எதிர்ப்பு தெரிவித்தார். குரு கோவிந்த் சிங் இதைப் புறக்கணித்துத் தன் செயல்பாடுகளைத் தொடர்ந்தார். [1] [2] இது 1682 ஆம் ஆண்டில் அனந்தபூர் போருக்கு வழிவகுத்தது. பீம் சந்த் கடனைத் திருப்பிச் செலுத்தக்கூடாது என்ற வெளிப்படையான நோக்கத்துடன் கடனாக யானைகள் மற்றும் கூடாரங்களைக் கோரினார். அவரது எண்ணத்தை அறிந்த குரு கடன் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் பீம் சந்த் அனந்தபூர் மீது தாக்குதல் நடத்தினார். அப்போது குரு கோவிந்த் ராயின் வயது 16 மட்டுமே. [3] பீம் சந்த் மற்றும் அவரது ஆட்கள் சீக்கியர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.
விளைவு
[தொகு]கலூரின் குருவிற்கும் பீம் சந்துக்கும் இடையிலான உறவுகள் பதட்டமாகவே இருந்தன. போருக்குப் பிறகு அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்தன. [4] எனவே, குருவுக்கு எதிராக மற்றொரு பிரச்சாரத்தைத் தொடங்க காங்க்ரா மற்றும் குலேரின் மன்னருடன் அவர் திட்டமிட்டார். அவர்கள் 1685 இன் தொடக்கத்தில் அனந்தபூரைத் தாக்கினர், ஆனால் அவர்கள் விரட்டப்பட்டனர். [5]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Hari Ram Gupta (1994). History Of The Sikhs Vol. I The Sikh Gurus (1469-1708). pp. 226–228. ISBN 8121502764.
- ↑ 2.0 2.1 Harajindara Siṅgha Dilagīra (1997). The Sikh reference book. p. 150. ISBN 9788170103011.
- ↑ Pritam Singh Gill (1978). History of Sikh Nation. p. 209.
- ↑ Harbans Kaur Sagoo (2001). Banda Singh Bahadur And Sikh Sovereignty. p. 59.
- ↑ Karam Singh Raju (1999). Guru Gobind Singh: Prophet of Peace. p. 57. ISBN 9789380213644.