அந்தோனைட்டு
அந்தோனைட்டு Anthonyite | |
---|---|
மெக்சிகோவின் அந்தோனைட்டு | |
பொதுவானாவை | |
வகை | ஆலைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Cu(OH,Cl)2•3(H2O) |
இனங்காணல் | |
நிறம் | இளஞ்சிவப்பு நீலம் |
படிக இயல்பு | பட்டகப் படிகங்கள், [001] இல் பொது வளைவு ; செதில் படிவாக |
படிக அமைப்பு | ஒற்றைச் சரிவு இடக்குழு தெளிவில்லை |
பிளப்பு | {100}, நன்று |
விகுவுத் தன்மை | சரிபாதியாக வெட்டலாம் |
மோவின் அளவுகோல் வலிமை | 2 |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα = 1.526 nβ = 1.602 nγ = 1.602 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.076 |
பலதிசை வண்ணப்படிகமை | X = இளஞ்சிவப்பு நீலம்; Y = Z = ஆழ்ந்த புகையும் நீலம் |
2V கோணம் | அளக்கப்பட்டது: 3° |
மேற்கோள்கள் | [1][2][3] |
அந்தோனைட்டு (Anthonyite) என்பது Cu(OH,Cl)2•3(H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இக்கனிமம் நீரிய இரண்டாம்நிலை தாமிர ஆலைடு கனிமம் என்று வகைப்படுத்தப்படுகிறது.
1963 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள அவுட்டன் மாகணத்தின் காலுமெட் கிராமத்தில் இருக்கும் நூற்றாண்டு சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அரிசோனா பல்கலைக்கழகத்தின் கனிமவியலாளர் யான் டபிள்யூ அந்தோனி (1920–1992) கண்டுபிடித்த காரணத்தால் கனிமத்திற்கு அந்தோனைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது.
குளோரைடு நிறைந்த நிலத்தடி நீரைச் சேர்ப்பதன் மூலம் அல்லது பாறையிடை திரவங்கள் சுழற்சியின் வழியாக பாசால்ட் எனப்படும் அக்னிப்பாறைகளின் பிளவுகளில் தாயக தாமிரத்திற்கு மாற்றாக அந்தோனைட்டு தோன்றுகிறது. இதேபோன்ற செஞ்சாய்சதுர கனிமமான காலுமெட்டைட்டும் இச்செயல்முறையிலேயே தோன்றுகிறது.
டிரிமோலைட்டு, குவார்ட்சு, மோனசைட்டு தாயக தாமிரம், கியுப்ரைட்டு, பாராடாகாமைட்டு உள்ளிட்ட கனிமங்களுடன் சேர்ந்தே அந்தோனைட்டும் சுரங்கத்தில் கிடைக்கிறது. அரிசோனாவிலுள்ள கோச்சைசு மாகாணம் பிசுபீயிலுள்ள கோல் சுரங்கத்திலும், மெக்சிகோவின் வில்லா எர்மோசா சுரங்கத்திலும் இக்கனிமம் கிடைக்கிறது.
செருமனியிலுள்ள எச்சேவிலும் கீரிசு நாட்டின் லௌரியம் சுரங்கத்திலும் ஒரு கசடு கனிமமாக அந்தோனைட்டு கிடைக்கிறது [1][2].