உள்ளடக்கத்துக்குச் செல்

அத்ரி கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அத்ரி கர், இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு விண்ணப்பத்தில் ஆண் மற்றும் பெண் என்பது மட்டுமே இருந்ததை நீண்ட சட்டப்போராட்டத்தின் மூலமாக மாற்றி திருநங்கை என்ற பாலினத்தையும் சேர்க்கச் செய்ததோடு, முதன்முதலாக அத்தேர்வில் அம்மாநிலத்தில் திருநங்கையாகவே பங்குகொண்டவர் ஆவார். [1] [2] [3]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

அத்ரி, மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள திரிபேனியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஆண்தன்மையுடன் பிறந்த இவர், பள்ளி பருவத்திலேயே பாலினம் மாறி, பெண்ணாக உணரத்தொடங்கினார். இவரது ஆங்கில ஹானர்ஸ் பட்டப்படிப்பை கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பெண் பாலினமாக முடித்த பின்னர், முதுகலை பட்டப்படிப்புக்காக பர்தாமான் பல்கலைக்கழகத்தில் சிறப்பு அனுமதி பெற்று முடித்துள்ளார். தொடர்ந்து குந்திகாட்டில் உள்ள ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். [4] அத்ரி,  பிரதாதி பந்திபாத்யாய் கல்வி நிறுவனத்தில் மாணவராக பயிலும்போது பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்ட அத்ரி, பல்வேறு நாவல்களைப் படிப்பதிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்

சட்டப் போராட்டம்

[தொகு]

2011 ஆம் ஆண்டு ஆசிரியர் கல்வியில் இளங்கலைப் படிப்பை (B.Ed)  முடித்த அத்ரி, அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்க வலைதளங்களில் முயற்சித்த போது பாலினமாக ஆண் அல்லது பெண் என்ற பிரிவுகள் மட்டுமே இருந்ததை கல்வித் துறையிடம் முதன்முதலாக எழுப்பியுள்ளார். பெண் என விண்ணப்பித்து தேர்வெழுதும்படியும், அதைப் பின்பற்றியே பணியமர்த்தும் முறைகளும் அமையும் என வங்காளக் கல்வித்துறை அதற்குப் பதிலளித்தது,

இதற்கிடையில், அத்ரி மேற்கு வங்க பணியாளர்கள் தேர்வில் தேர்ச்சி பெற விரும்பி ஆர் ஐ சி ஈ என்ற பயிற்சி மையத்தில் சேர்ந்து ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி பெற்றார். ஆனால் 2016 ஆம் ஆண்டு அந்த தேர்வுக்கான படிவத்தை நிரப்ப முயற்சித்தபோது, பாலின பத்தியில் ஆண் அல்லது பெண் என இரண்டு விருப்பங்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இவர், இம்முறை இந்திய உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு வெற்றி பெற்று தேர்வில் பங்கெடுத்துள்ளார்..

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Transgender to Write UPSC Exam in Bengal for the First Time" (in en-US). The Better India. 2018-03-03. https://www.thebetterindia.com/133102/atri-kar-transgender-bengal-upsc-candidate-others-category-moves-court/. 
  2. "Atri Kar vs The Union Of India & Ors on 16 March, 2017". indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2018-04-21.
  3. "Bengal's Atri Kar, First Transgender to take UPSC exam in 'other' category". www.shethepeople.tv (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-03-03. பார்க்கப்பட்ட நாள் 2018-04-21.
  4. . 2017-01-20. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்ரி_கர்&oldid=3677035" இலிருந்து மீள்விக்கப்பட்டது