உள்ளடக்கத்துக்குச் செல்

அத்தப்பூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அத்தப்பூக்களம்

மலையாள மாதமாகிய சிங்க மாதத்தில் அத்தம் நாள் முதல் திருவோணம் வரை உள்ள பத்து நாட்களுக்கு, கேரளத்து மக்கள் தங்கள் வீட்டு முற்றத்தில் அலங்காரம் செய்வர். அதில் அத்தப் பூக் கோலம் முதன்மையான இடத்தைப் பிடிக்கும். திருக்காக்கரையப்பன் என்ற இறைவனை வேண்டி, பூ அலங்காரம் செய்வர்.[1] சிலர் திருக்காக்கரை வரை சென்று வழிபடுவதும் உண்டு. அங்கு வரை செல்ல முடியாதவர்கள் தங்கள் வீட்டு முற்றத்தில் பூக்களம் உண்டாக்கி அதில் தன்னை வழிபாடு நடத்தினால் அருள் கிடைக்கும் என திருக்காக்கரையப்பன் அருள் வழங்கியதாக ஐதீகம் உள்ளது.

அத்தம், சித்திரை, சோதி உள்ளிட்ட மலையாள நாட்களில், வீட்டு முற்றத்தை சாணம் மெழுகி, தும்பைப் பூவைக் கொண்டு அலங்கரிப்பர். முதல் நாள் ஒரு பூவும், இரண்டாம் நாள் இரண்டு பூக்கள் என ஒவ்வொரு நாளுக்கு ஏற்ப பூக்களின் எண்ணிக்கை மாறும். சோதி நாளில் செம்பருத்திப் பூவில் அலங்கரிப்பது உண்டு.[2][3]

திருவோண நாள் இரவில், பூக்களத்தில் பலகையிட்டு அரிசி மாவு பூசுவர். மண்ணால் ஆன விக்ரகங்களையும் வைப்பர். பாலடை, பழம், சர்க்கரை ஆகியவற்றை படைப்பர். சதயம் நாள் வரை, ஒவ்வொரு நாளும் மூன்று நேரமும் வணங்குவர். இப்படி பத்து நாளும் விழா இருக்கும்.[4]

இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://tamil.oneindia.in/news/2012/08/29/tamilnadu-the-onam-harvest-festival-brings-malayalees-together-160429.html
  2. http://cinema.maalaimalar.com/2013/09/16170732/Onam-festival-athapu-kolam-peo.html
  3. http://www.maalaimalar.com/2013/09/06141820/Kerala-onam-festival-celebrati.html[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-22. பார்க்கப்பட்ட நாள் 2014-08-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தப்பூ&oldid=3592426" இலிருந்து மீள்விக்கப்பட்டது