உள்ளடக்கத்துக்குச் செல்

அதுர்த்தி சுப்பா ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதுர்த்தி சுப்பா ராவ்
பிறப்பு(1912-12-16)16 திசம்பர் 1912
ராஜமன்றி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு1 அக்டோபர் 1975(1975-10-01) (அகவை 62)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்புனித சேவியர் கல்லூரி, மும்பை
பணிEditor
Cinematographer
Producer
Director
Screenwriter
வாழ்க்கைத்
துணை
காமேசுவரி பாலா
விருதுகள்ஏழு தேசிய திரைப்பட விருதுகள்
நந்தி விருது
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்

அதிருதி சுப்பா ராவ் (Adurthi Subba Rao) (16 திசம்பர் 1912 – அக்டோபர் 1 1975) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளரும், திரைக்கதை ஆசிரியரும், படத் தொகுப்பாளரும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படங்களில் பணியற்றியதற்காக நன்கு அறியப்படுகிறார். ராவ் இந்திய நாடகத் திரைப்படங்களின் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார்.[1][2] இவர் ஏழு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்.[1][3] 1948ஆம் ஆண்டு இந்தியாவின் 39வது சர்வதேசத் திரைப்பட விழாவில் "தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் பொக்கிஷங்கள்" என்ற பிரிவில் காட்சிப்படுத்தப்பட்ட கல்பனா என்ற நடனத் திரைப்படத்தில் உதய் சங்கரின் கூட்டாளியாக ராவ் திரையுலகில் நுழைந்தார்.[4] 1960இல் வெளியான நம்மின பந்து என்ற திரைப்படம் நில உரிமையாளர்களால் விவசாயிகளை சுரண்டல் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த படம் ஒரே நேரத்தில் தமிழில் "பாட்டாளியின் வெற்றி" என்ற பெயரில் படமாக்கப்பட்டது. வெளியானதும் இரண்டு பதிப்புகளும் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றன. சான் செபாஸ்டியன் சர்வதேச திரைப்பட விழாவில் தெலுங்குத் திரைப்படம் திரையிடப்பட்டது.[5] அந்த வருடத்தில் தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் இந்தப் படம் வென்றது.[1][5][6] 1964 ஆம் ஆண்டு வெளிவந்த டாக்டர் சக்கரவர்த்தி என்ற திரைப்படம் கோடூரி கௌசல்யா தேவியின் சக்கரப்பிரமாணம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு தழுவி எடுக்கப்பட்டது. 1964ஆம் ஆண்டில் ஆந்திர அரசால் நிறுவப்பட்ட நந்தி விருதை வென்ற முதல் படமாக இது இருந்தது.[7] திரையரங்க வசூலில் பெற்ற வெற்றிக்குப் பிறகு அந்த ஆண்டிற்கான தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றது.[8] இவரது அடுத்த படைப்பு மூக மனசுலு, மறுபிறப்பு என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியத் திரைப்படங்களில் அரை-புனைகதை வகையின் முதல் வகை, கதை முழுவதும் பரந்த அளவிலான மனநிலையை ஊக்குவிக்கும் கூறுகளுடன் தீவிரமானதாக இருந்தது. இந்தப் படம் பின்னர், இந்தியில் மிலன் (1967) என்ற பெயரிலும், தமிழில் பிராப்தம் (1971) என்ற பெயரிலும் வெளி வந்தது. தெலுங்கு பதிப்புக்காக தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும், 1964இல் பிலிம்பேர் சிறந்த திரைப்பட விருதையும் (தெலுங்கு) பெற்றது. மேலும், கார்லோவி வேரி சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.[9][10]

1968 ஆம் ஆண்டில், இவர் தனது படைப்பான சுடிகுண்டலுவில் நீதிமன்ற நடவடிக்கைகளையும், துப்பறிவுப் புனைவையும் பரிசோதித்தார். இந்த படம் தாஷ்கண்ட் மற்றும் மாஸ்கோ திரைப்பட விழாக்களில் "முக்கிய" கதையம்சம் கொண்ட திரைப்படத்திற்காக சிறப்பு குறிப்பு பெற்றது.[11][12] இந்த படம் தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும், சிறந்த திரைப்படத்திற்கான நந்தி விருதையும், சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளது. அந்த வருடத்திற்கான இந்திய சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.[12][13]

ஆரம்ப வாழ்க்கையும், தொழிலும்

[தொகு]

இவர் சாத்தன்னா பந்துலு - ராஜலட்சுமியம்மா அகியோருக்கு 16 திசம்பர் 1912 இல் பிறந்தார். இவரது தந்தை ராஜமன்றியில் வட்டாசியராக இருந்தார். அதுர்த்தி சுப்பாராவ் தனது 14 வயதில் பள்ளி இறுதிப் படிப்பை ( மெட்ரிக் ) முடித்தார். காக்கிநாடா பி.ஆர் கல்லூரியில் தனது முன் பல்கலைக்கழகப் படிப்பில் சேர்ந்தார். பின்னர், மும்பை புனித சேவியர் கல்லூரியில் மூன்று வருட ஒளிப்படவியல் படிப்பில் சேர்ந்து, இரண்டு வருடத்திலேயே முடித்தார்.[1]

தொழில்

[தொகு]

1957 ஆம் ஆண்டில் சரத் சந்திர சாட்டர்ஜியின் நிஷ்க்ருதி என்ற வங்காள மொழி புதினத்தைத் தழுவி, தெலுங்கில் தோடி கோடலு, என்ற பெயரிலும், தமிழில் "எங்க வீட்டு மகாலட்சுமி" (1957) எனவும் படமாக்கப்பட்டது. இரண்டு திரைப்படங்களும் ஒரே தாயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்டு ஒரே இயக்குநரால் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டன. மேலும் சில காட்சிகளும் கலைஞர்களும் இரண்டு பதிப்புகளிலும் ஒரே மாதிரியாக நடித்திருந்தார்கள். இந்தப் படம் தெலுங்கில் சிறந்த அம்சத்துக்கானத் திரைப்பட தகுதிச் சான்றிதழை வென்றது. 1959இல் பெங்காலியில் வெளிவந்த அக்னி பரிக்ஷா என்ற காதல் நாடகத் திரைப்படத்தைத் தழுவி தெலுங்கில் மாங்கல்ய பலம், என்ற பெயரிலும், தமிழில் மஞ்சள் மகிமை என்ற பெயரிலும் இயக்கினார். இரண்டு பதிப்புகளும் திரையரங்க வசூலில் வெற்றிகளைப் பெற்றன. 1960ஆம் ஆண்டில் தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் [14] மேலும் சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருதையும் வென்றது. 1961 இல், இவர், கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் குமுதம் என்ற படத்தை இயக்கினார். இது தெலுங்கில் மஞ்சி மனசுலு (1962) என மறு ஆக்கம் செய்யப்பட்டது. குமுதம் 29 ஜூலை 1961 அன்று வெளியாகி திரையரங்கில் வணிக ரீதியான வெற்றி பெற்றது. இந்த படம் 9வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்றாவது சிறந்த திரைப்படத்திற்கான சான்றிதழ் பெற்றது. பின்னர், 1976இல் மகாகவி சேத்ரையாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எழுதி இயக்கினார்.[15][16] இந்தப் பணியின்போது ராவ் இறந்ததையடுத்து இயக்குனர் சி. எஸ். ராவ் மீதமுள்ள படப்பிடிப்பை முடித்தார்.[17]

இவரது வாழ்க்கை வரலாற்றை மூத்த நடிகர் கிருட்டிணா வெளியிட்டார். அவர் சுப்பா ராவ் இயக்கத்தில் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.[18] பிரபல இயக்குனர் கே. விஸ்வநாத் பல ஆண்டுகளாக இவருடன் இணைந்து இயக்குனராக பணியாற்றியுள்ளார். தெலுங்குத் திரைப்பட வர்த்தக சபை இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக "அதுர்த்தி சுப்பா ராவ்" விருதை நிறுவியுள்ளது.[19]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Master movie maker - The Hindu
  2. "Stars : Star Profiles : Adurti Subbarao: A Tribute". Telugu Cinema. 2 November 2013. Archived from the original on 2 November 2013. பார்க்கப்பட்ட நாள் 12 ஆகஸ்ட் 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help); Unknown parameter |= ignored (help)
  3. "Krishna Chaitanya « Page 2". Archived from the original on 5 May 2014. பார்க்கப்பட்ட நாள் 1 March 2014.
  4. "NFAI brings its treasures to IFFI-Goa". Ministry of Information and Broadcasting PIB. 25 November 2008.
  5. 5.0 5.1 "Profile of Gummadi — Telugu film actor".
  6. "7th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 4 September 2011.
  7. "Tollywood's glorious journey". Chitramala. Archived from the original on 30 January 2010. பார்க்கப்பட்ட நாள் 10 January 2019.
  8. "Ramadasu (1964) Awards - Award Winners Of Ramadasu Telugu Movie". gomolo.com. Archived from the original on 25 August 2018. பார்க்கப்பட்ட நாள் 10 January 2019.
  9. "11th National Film Awards". International Film Festival of India. Archived from the original on 2 May 2017. பார்க்கப்பட்ட நாள் 13 September 2011.
  10. https://web.archive.org/web/20090501055610/http://www.telugucinema.com/c/publish/stars/interview_jamuna_2009_2.php
  11. "15th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 25 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 21 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. 12.0 12.1 "Film producer passes away".
  13. "15th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 25 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 21 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. "6th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. Archived from the original on 20 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 3 September 2011. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  15. "Mahakavi Kshetrayya (Banner)". Filmiclub.
  16. "Mahakavi Kshetrayya (Direction)". Know Your films.
  17. "Mahakavi Kshetrayya (Review)". The Cine Bay.
  18. Adurthi Subba Rao Book launch by Krishna, Mahesh Babu & Kasinadhuni Viswanath - Telugu cinema news
  19. "Events - Adurthi Subbarao Awards Presented gallery clips actors actress stills images". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2021-08-12.

வெளி இணைப்புஅக்ள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதுர்த்தி_சுப்பா_ராவ்&oldid=3927042" இலிருந்து மீள்விக்கப்பட்டது