உள்ளடக்கத்துக்குச் செல்

அதிம் அல்-தாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருதுக் கவிதைகளில் சித்தரிக்கப்பட்டுள்ள அதிம் அல்-தாயி (இடம்)

அதிம் அல்-தாய் (Hatim al-Tai) (இறப்பு; கி.பி 578), ஒரு அராபிய வீரரும், அரேபியாவின் தாயி பழங்குடியினரின் தலைவரும், சம்மரின் ஆட்சியாளரும் மற்றும் கவிஞரும் ஆவார். இவர் ஆறாம் நூற்றாண்டின் கடைசி பாதியில் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர்.[1][2][3] தனது காலத்தில் நன்கு நிறுவப்பட்ட கவிஞராகக் கருதப்பட்டாலும், இன்று இவர் தனது ஒப்புரவாண்மையால் மிகவும் பிரபலமானவர்.[4] இவரது அதீத பெருந்தன்மை பற்றிய கதைகள் இவரை இன்று வரை அரேபியர்களிடையே ஒரு குறியீடாக ஆக்கியுள்ளன. கூடுதலாக, இவர் அரபு ஆண்மையின் ஒரு மாதிரியாக அறியப்படுகிறார்.[5]

இவரது மகன் ஆதி இபின் அதிம் இசுலாமிய தீர்க்கதரிசி முகம்மது நபியின் தோழராக இருந்தார்.[6]

சுயசரிதை

[தொகு]

அதிம் அல்-தாய் இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள கெயில் என்ற இடத்தில் வாழ்ந்தார். மேலும் முகம்மது நபியின் சில ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளார்.[7] இவர் கிபி 578 இல் இறந்த [8] இவர் துவாரினிலுள்ள ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது கல்லறை ஆயிரத்தொரு இரவுகளில் விவரிக்கப்பட்டுள்ளது.[9] அதிம் என்ற பெயருக்கு அரபு மொழியில் ‘கருப்பு காகம்’ என்று பொருள்.[10]

துவாரினில் உள்ள அதிமின் அரண்மனையின் இடிபாடுகள்

அதிம் கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். மேலும் ஆயிரத்தொரு இரவுகள் கதைகளிலும் காணப்படுகிறார். புகழ்பெற்ற பாரசீகக் கவிஞரான சாடி, தனது படைப்பான குலிஸ்தானிலும் (1259)[11] புஸ்தானிலும் (1257) குறிப்பிடப்படுகிறார். [12] பல்வேறு புத்தகங்கள் மற்றும் கதைகளில் உள்ள புனைவுகளின்படி, இவர் தாய் பகுதியில் ஒரு பிரபலமான ஆளுமையாகவும் மற்றும் மத்திய கிழக்கின் மற்ற பகுதிகளிலும் இந்திய துணைக்கண்டத்திலும் நன்கு அறியப்பட்ட நபராகவும் இருந்தார். அரபு மொழி, பாரசீக மொழி, உருது, உருது, இந்தி துருக்கிய மொழி காசுமீரி மொழி மற்றும் பல்வேறு மொழிகளில் பல புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் இடம்பெற்றுள்ளார்.

இவரது படைப்புகளில் ஒன்று ஆங்கிலத்தில் "ஆன் அவரிஸ்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[13]

அதிமின் கதைகள் ஈரான், வட இந்தியா மற்றும் பாக்கித்தானிலும் பிரபலமாக உள்ளன.[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. van Arendonk, Cornelis (1987). E.J. Brill's First Encyclopaedia of Islam 1913-1936. E. J. Brill. p. 290. ISBN 9789004082656.
  2. Koelbl, Susanne (15 September 2020). Behind the Kingdom's Veil: Inside the New Saudi Arabia Under Crown Prince Mohammed bin Salman. Mango Media. ISBN 9781642503456. Archived from the original on 7 October 2023. Retrieved 24 September 2023.
  3. Gandhi, Menka (16 October 2004). The Complete Book of Muslim & Parsi Names. Penguin UK. ISBN 9788184750546. Archived from the original on 7 October 2023. Retrieved 24 September 2023.
  4. "Arabia's Legendary Almsgiver Hatem al Tai - Destination KSA". 4 May 2015. Archived from the original on 14 May 2023. Retrieved 14 May 2023.
  5. The Arabian Nights: Tales from a Thousand and One Nights. Random House Publishing. 26 August 2009. ISBN 9780307417015. Archived from the original on 23 January 2023. Retrieved 21 September 2022.
  6. The Living Prophet by Syed Sulaiman Nadvi. pp. 106
  7. Abdul-Rahman, Muhammad Saed (2003-12-21). Islam: Questions And Answers - The Heart Softeners (Part 1) (in ஆங்கிலம்). MSA Publication Limited. pp. 81–82. ISBN 9781861793287.
  8. Kitab al-Aghani by Abu al-Faraj al-Isfahani
  9. van Arendonk, Cornelis (1987). E.J. Brill's First Encyclopaedia of Islam 1913-1936. E. J. Brill. p. 290. ISBN 9789004082656.
  10. The Arabian Nights: Tales from a Thousand and One Nights. 26 August 2009. ISBN 9780307417015. Archived from the original on 23 January 2023. Retrieved 21 September 2022.
  11. Clouston, A. W. (1881). "Hatim Tai, the Generous Arab Chief" பரணிடப்பட்டது 2023-02-22 at the வந்தவழி இயந்திரம். Arabian Poetry. p. 409.
  12. Edwards, A. Heart, tr. (1911). The Bustan of Sadi பரணிடப்பட்டது 2019-10-20 at the வந்தவழி இயந்திரம். pp. 53–57.
  13. Clouston, A. W. (1881). "On Avarice by Hatem Tai" பரணிடப்பட்டது 2023-02-22 at the வந்தவழி இயந்திரம். Arabian Poetry பரணிடப்பட்டது 2023-02-22 at the வந்தவழி இயந்திரம். pp. 99–100
  14. "Chapter Three: Qissah-e Hatim" பரணிடப்பட்டது 2023-04-15 at the வந்தவழி இயந்திரம். University of Columbia. Retrieved 30 April 2023.

மேலும் படிக்க

[தொகு]
  • The Story of Hatim in The Arabian Nights (AD 800–900 in modern form).
  • The Adventures of Hatim Tai (Qissa-e-Hatim Tai, from an 1824 Persian manuscript) by Duncan Forbes (linguist).
  • Adventures of the second Darwesh in Bagh-o-Bahar or Qissa Chahar Darvesh, Mir Amman of Delhi, Urdu 1804, translated by Duncan Forbes (linguist) [1]
  • Edward FitzGerald (poet)(1809–1883) mentions Hatim Tai in his translations of the Rubaiyat of Omar Khayyam. See quatrain IX in Fitzgerald's first edition:
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிம்_அல்-தாய்&oldid=4025477" இலிருந்து மீள்விக்கப்பட்டது