அதிமீயொலி ஆயுதம்
Appearance

அதிமீயொலி ஆயுதம் என்பது ஒலியின் வேகத்தை விட 5 முதல் 25 மடங்கு அல்லதுவினாடிக்கு 1 முதல் 5 மைல்கள் (1.6 முதல் 8.0 கிமீ/வி) வரையிலான அதிமீயொலிவேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட ஆயுதம் ஆகும்.[1]:{{{3}}}
அத்தகைய வேகத்திற்குக் கீழேயுள்ள ஆயுதங்கள் குறைஒலிவேகம் அல்லது மீயொலிவேகம் என வகைப்படுத்தப்படும். அதே நேரத்தில் அத்தகைய வேகத்திற்கு மேல் செல்லும்போது, வளிமண்டலத்தின் மூலக்கூறுகள் அயனிமமாகப் பிரிந்து, கட்டுப்பாட்டையும் தகவல்தொடர்பையும் கடினமாக்குகிறது.
பல வகையான அதிமீயொலி ஆயுதங்கள் உள்ளன:
- அதிமீயொலி சறுக்கு வாகனம்
- அதிமீயொலி சீர்வேக ஏவுகணை
- அதிவேகத்தை அடைய மீத்திமிசுத்தாரை போன்ற காற்றை சுவாசிக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தும் அதிமீயொலி வானூர்தி[1]:{{{3}}}
- பீரங்கியால் ஏவப்பட்ட, வழிகாட்டப்பட்ட எறிகணைகளை சுடும் ஆயுதங்கள்
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ 1.0 1.1 John T. Watts; Christian Trotti; Mark J. Massa (August 2020), Primer on Hypersonic Weapons in the Indo-Pacific Region (PDF), Atlantic Council, ISBN 978-1-61977-111-6