உள்ளடக்கத்துக்குச் செல்

அதிகால்சிய நீரிழிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதிகால்சிய நீரிழிவு (Hypercalciuria) என்பது சிறுநீரில் அளவுக்கு மீறிய கால்சியம் இருக்கும் நிலையைக் குறிக்கும். இந்நிலை நீடித்தால் சிறுநீரகங்கள் செயல்படுவதில் குறைபாடு தோன்றும். சிறுநீரகத்தில் சுண்ணாம்பு அளவு மிகுதியாகி செயலிழக்கும் நிலையை அடையும்.[1][2] நெடுநாள் சிறுநீரகக் கோளாறுகள் தோன்றி படிப்படியாக சிறுநீரகத்தால் உடலின் கழிவுப் பொருட்களை வெளியேற்ற முடியாமல் நிரந்தரமாக செயலிழந்து போகும். அதிகால்சிய நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீரகங்கள் இயல்பைவிட அதிகமான அளவு கால்சியத்தை சிறுநீரில் வெளியேற்றுகின்றன. குடல் வழியாக பெறப்படும் கால்சியம் மற்றும் எலும்புகளிலிருந்து உறிஞ்சப்படும் கால்சியம் என்ற இவ்விரண்டு வழிகளில் ஒன்றின் மூலமாகத்தான் உடலில் கால்சியத்தின் அளவு மிகுதியாகும். எலும்புகளிலிருந்து கால்சியம் பெறப்படுகிறதா என்பதை ஒளி-நிழல் கருவிகள் மூலம் எலும்புகளின் அடர்த்தியை நுண்ணாய்வு செய்து அறியலாம்.

அதிகால்சிய நீரிழிவு நோய் நோயாளிகளுக்கு மரபணு காரணங்களாலும் ஏற்படலாம்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Correspondent, Vikatan. "சிறுநீரகக் கற்கள் தீர்வு என்ன?". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
  2. "சிறுநீரகக்கற்களை கரைப்பது எப்படி". Dinamalar. 2019-05-14. பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
  3. Lieske, John. "Kidney Stones - Update in Diagnosis and Management". Mayo Foundation For Medical Education And Research. Archived from the original on 26 August 2013. பார்க்கப்பட்ட நாள் 3 December 2013.
  4. "சிறுநீரக கல் பாதிப்பை தடுக்க என்ன வழி?". Dailythanthi.com. 2018-09-03. பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.

புற இணைப்புகள்

[தொகு]
வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிகால்சிய_நீரிழிவு&oldid=3479762" இலிருந்து மீள்விக்கப்பட்டது