அதிகாரகல்லள்ளி
Appearance
அதிகாரகல்லள்ளி | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 12°49′25″N 77°48′02″E / 12.8235600°N 77.8005200°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூர் |
வட்டம் | ஆனேகல் |
அரசு | |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 562107 |
அருகில் உள்ள நகரம் | பெங்களூர் |
குடிமை முகமை | கிராம ஊராட்சி |
அதிகாரகல்லஹள்ளி (Adigarakallahalli) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [1] இது கர்நாடகத்தின் பெங்களூர் மாவட்டத்தில் உள்ள ஆனேகல் வட்டத்தில் அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாநில தலைநகரான பெங்களூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், ஆனேகலில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
[தொகு]இந்த கிராமத்தின் மொத்தப் பரப்பளவு 282.76 எக்டேர் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 524 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 2,915 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 1,396 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 1,519 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 68.30%ஆகும். இதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 71.49% என்றும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 64.83% என்றும் உள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Yahoo! maps India :". Archived from the original on 2008-12-18. பார்க்கப்பட்ட நாள் 2009-04-17. Adigarakallahalli, Bangalore, Karnataka
- ↑ "Adigarakallahalli Village in Anekal (Bangalore) Karnataka - villageinfo.in". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.