உள்ளடக்கத்துக்குச் செல்

அதாத் சிவன் கோயில்

ஆள்கூறுகள்: 10°32′39″N 76°08′23″E / 10.5442787°N 76.1398407°E / 10.5442787; 76.1398407
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதாத் சிவன் கோயில்
நாலம்பலம் கிழக்குப் பகுதி
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:திருச்சூர்
அமைவு:அதாத்
ஆள்கூறுகள்:10°32′39″N 76°08′23″E / 10.5442787°N 76.1398407°E / 10.5442787; 76.1398407
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரள பாணி

அதாத் சிவன் கோயில்(Adat shiva temple) என்பது திருச்சூர் மாவட்டத்தில் அதாத் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் முக்கிய தெய்வங்கள் பரமேசுவரரும்,மகாவிஷ்ணுவும் ஆவர். இரு தெய்வங்களும் தனித்தனி கோயில் வளாகத்தைக் கொண்டுள்ளன. பரமேசுவரர் கிழக்கு நோக்கியும், மகா விஷ்ணு மேற்கு நோக்கியும் இருக்கிறார். இக்கோவில் பரசுராமரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும், இது கேரளாவின் 108 முக்கிய சிவன் கோவில்களில் ஒன்றாகும்.[1][2][3]

அதாத் விஷ்ணு கோயில்

[தொகு]

அதாத் கிராமத்தின் பெயரைக் குறித்தும் அதாத் மகாவிஷ்ணு கோவிலின் பெயர் குறித்தும் விசித்திரமான தொன்மக்கதை ஒன்று உள்ளது. அந்தக் கதை குருராம்மா மற்றும் குருர் இல்லத்துடன் தொடர்புடையது. ஒருமுறை குருவாயூரப்பனின் பூஜைக்காக குருராம்மா பிரசாதம் தயாரித்தபோது ஒரு சிறுவன் அவளுக்கு உதவுவதாக வந்தான். குருராம்மா வில்வமங்கலம் சாமியாரின் வருகைக்காக காத்திருந்தபோது பிரசாதத்தைச் சிறுவன் உண்ணுவதைப் பார்த்து அச்சிறுவனைப் பானையில் போட்டு மூடி வைத்ததாகவும் பின்னர் சிறுவனாக வந்தது குருவாயூரப்பன் என்று அறிந்ததாகவும் நம்பப்படுகிறது. அந்த இடம் கிருஷ்ணரை மூடியது என்னும் பொருளில் அதாத் என்று அழைக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kunjikuttan Ilayath. 108 Siva Kshetrangal. H and C Books.[page needed]
  2. "108 Shiva Temples created by Lord Parasurama in Kerala – Sanskriti - Hinduism and Indian Culture Website". 3 March 2018. Archived from the original on 18 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "108 Shivalaya Nama Stotram - 108 Shivalaya Nama Stothra – Temples In India Information". templesinindiainfo.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதாத்_சிவன்_கோயில்&oldid=3927033" இலிருந்து மீள்விக்கப்பட்டது