உள்ளடக்கத்துக்குச் செல்

அதபசக்கா எண்ணெய் மணல்கள்

ஆள்கூறுகள்: 57°01′N 111°39′W / 57.02°N 111.65°W / 57.02; -111.65
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதபசக்கா எண்ணெய் மணல்கள்
நாடுகனடா
பிரிவுவடக்கு ஆல்பெர்ட்டா
அக்கரை/இக்கரைOnshore, mining
ஆள்கூறுகள்57°01′N 111°39′W / 57.02°N 111.65°W / 57.02; -111.65
இயக்குபவர்கள்சின்குரூடு, சன்கார், கனடிய இயற்கை வளங்கள் நிறுவனம் (CNRL), ஷெல், டோட்டல், இம்பீரியல் ஆயில், பெட்ரோ கனடா, டெவோன், அஸ்கி, இசுடாட்யாயில், நெக்சென்
பங்குதாரர்கள்செவ்ரான், மராத்தான், கோனோகோபிலிப்சு, பீ.பி, ஓக்சி
வரலாறு
கண்டுபிடிப்பு1848
உற்பத்தி ஆரம்பம்1967
உற்பத்தி
தற்போதைய எண்ணெய் உற்பத்தி13,00,000 bbl/d (~6.5×10^7 t/a)[1]
Estimated oil in place1,33,000 Mbbl (~1.81×10^10 t)[2]
Producing formationsMcMurray, Clearwater, Grand Rapids

அதபசக்கா எண்ணெய் மணல்கள் (Athabasca oil sands) அல்லது அதபசக்கா கரியெண்ணெய் மணல்கள் (Athabasca tar sands) அல்லது ஆல்பர்ட்டா கரியெண்ணெய் மணல்கள் (Alberta tar sands) கனடிய ஆல்பர்ட்டா மாநிலத்தின் வடகிழக்கே மெக்மர்ரி கோட்டையை மையமாகக் கொண்டுள்ள பெரும் அசுபால்ட்டு வைப்புக்கள் அல்லது மிகவும் கனமான பாறை எண்ணெய் வைப்புக்களாகும்.

இந்த எண்ணெய் மணல்கள், முதன்மையாக மெக்மர்ரி படுகையில் அமைந்துள்ளன; இவற்றில் நிலக்கீலுடன் (பகுதி திண்மையான, பாறை வடிவில் பாறையெண்ணெய்) சிலிக்கா மணல், களிமண் தாதுக்கள், நீர் கலந்துள்ளன.உலகில் அறியப்பட்டுள்ள நிலக்கீல் வைப்புக்களில் அதபசக்கா எண்ணெய் மணல்களே மிகப் பெரியனவாகும். ஆல்பர்ட்டாவில் அமைந்துள்ள மூன்று எண்ணெய்மணல்வெளிகளில் இதுவே பெரியதாகும். மற்றவை அமைதியாற்று எண்ணெய் மணல்களும் கோல்டுலேக் எண்ணெய் மணல்களும் ஆகும். இதில் கோல்டுலேக்கு எண்ணெய் மணல்கள் சஸ்காச்சுவான் வரை பரந்துள்ளன.[3]

இவை அனைத்தும் 141,000 சதுர கிலோமீட்டர்கள் (54,000 sq mi) பரப்பளவு சேறு மற்றும் தைகா காடுகளில் உள்ளன; இவற்றில் 1.7 trillion barrels (270×10^9 m3) நிலக்கீல் உள்ளது. உலகில் வழமையான பாறை எண்ணெய் வைப்புக்களுக்கு இணையாக இது உள்ளது. பன்னாட்டு ஆற்றல் முகமை (IEA) பொருளியல்ரீதியாக மீட்கக்கூடிய வைப்புக்களைப் பட்டியலிட்டுள்ளது; 2006இல் இது 178 billion barrels (28.3×10^9 m3) அளவில், ஏறத்தாழ மொத்த வைப்புக்களில் 10% ஆக இருந்தது.[3] கனடாவின் உறுதியளிக்கப்பட்ட மொத்த வைப்புக்கள் உலகில் மூன்றாவது மிகப்பெரிய நிலையில் உள்ளது; சவூதி அரேபியா மற்றும் வெனிசூலாவின் ஓரினோக்கோ மண்டலம் மற்றவிரு வைப்புகளாகும்.[4]

இருவிதமான பிரித்தெடுக்கும் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன: தரைமட்டத்திற்கு அடியில் ஆழமாக இருக்கும் நிலக்கீலை பிரித்தெடுக்க இயல் நிலை பிரித்தெடுப்பு பயன்படுத்தப்படுகின்றது; தரைமட்டத்திற்கு அருகிலுள்ள நிலக்கீலைப் பிரித்தெடுக்க திறந்தவெளி அல்லது தரைமட்ட சுரங்க முறை பயன்படுத்தப்படுகின்றது. இரண்டாவது வகையில் 20%தான் பிரித்தெடுக்க முடியும்.[5] மேலும் இது நச்சுநிறை குளங்களை உண்டாக்குகின்றது. மாறாக இயல்நிலை பிரித்தெடுப்பில் சிறப்பு வழிமுறைகள் பயன்படுத்தப்படுவதால் புவிமாசடைதல் குறைவாக உள்ளது. ஆல்பெர்ட்டாவில் 97.5% பகுதியில் இயல்நிலை பிரித்தெடுப்பே நடைபெறுகின்றது.[6]

பெரியளவு சுரங்க வேலைகளால் சுற்றுச்சூழலுக்கும் உடல்நலத்திற்கும் ஏற்படும் கேடுகளை குறைப்பதற்கு அரசும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என தன்னார்வலர்கள் எதிர்த்து வருகின்றனர்.[7][8] இரு தரப்பும் வைக்கும் ஒருசார்பான தரவுகளால் புறநிலைக் கருத்து எதுவும் எய்தவியலவில்லை.[9][10][11]

அதபசக்கா எண்ணெய் மணல்களில் சுரங்க இயக்கம். படத்தில் கூலக்கழிபொருள் குளத்திலிருந்து 600 மீ தொலைவில் அதபசக்கா ஆற்றைக் காணலாம். நாசா புவி வானாய்வகம் ஒளிப்படம், 2009.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. IHS CERA (மே 18, 2009). "Oil Sands Move from the 'Fringe to Center' of Energy Supply". RigZone. Archived from the original on 2009-05-21. பார்க்கப்பட்ட நாள் 2009-05-19.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-09-25. பார்க்கப்பட்ட நாள் 2017-03-01.
  3. 3.0 3.1 Mather, Clive யூடியூபில் "The Oil Sands of Alberta", Canada Broadcasting Corporation.
  4. "Alberta's Oil Sands 2006" (PDF). Government of Alberta. 2007. Archived from the original (PDF) on 2008-02-27. பார்க்கப்பட்ட நாள் 2008-02-17.
  5. "Steam-Assisted Gravity Drainage (SAGD)". Cenovus. Archived from the original on 2016-04-26. பார்க்கப்பட்ட நாள் 2016-05-07.On this site is a Cenovus animation on how SAGD works.
  6. "What are Oil Sands?". CAPP. 2009. Archived from the original on 2013-05-25. பார்க்கப்பட்ட நாள் 2016-05-07.
  7. "Alberta Plan Fails to Protect Athabasca River". Archived from the original on 2007-04-26. பார்க்கப்பட்ட நாள் 2016-05-07.
  8. "Alberta's tar sands are soaking up too much water". The Globe and Mail (Dogwood Initiative). 2006-07-05. http://www.dogwoodinitiative.org/newsstories/oilandwaterdonotmix. பார்த்த நாள்: 2016-05-07. 
  9. "'Conspiracy of silence' on tarsands, group says". CTV News இம் மூலத்தில் இருந்து 2008-02-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080220054616/http://www.ctv.ca/servlet/ArticleNews/story/CTVNews/20080215/tarsands_enviroreport_080215/20080215?hub=SciTech. பார்த்த நாள்: 2008-02-16. 
  10. "Tar won't stick". Edmonton Journal. http://www.canada.com/edmontonjournal/news/opinion/story.html?id=09dd2691-c993-44a3-a254-26619a230a80. பார்த்த நாள்: 2008-02-16. 
  11. "Time for Ottawa to stop tiptoeing around Alberta oilsands sensibilities". Oil Week. 2008-02-15 இம் மூலத்தில் இருந்து 2008-06-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080603062838/http://www.oilweek.com/news.asp?ID=14357. பார்த்த நாள்: 2008-02-16.  (industry publication)

மேலும் அறிய

[தொகு]

ஒளிதங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]