உள்ளடக்கத்துக்குச் செல்

அணைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அணைவு எந்திரம்

அணைவு (lapping) பரப்பு சீரமைக்கும் ஒரு முறை. இதனால் பொருள்களின் மேற்பரப்பைச் சீராக்கிச் சீராக்கிச் சொரசொரப்பை நீக்கலாம். பொருள்களின் வடிவத்தையும், உருவத்தையும் வேண்டிய அளவுக்குத் துல்லியமாக்கலாம்.

வைரம், சிலிக்கான் கார்பைடு, அலுமினியம் ஆக்ஸைடு போரான் நைட்ரைடு பொடிகள் அணைவுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இப்பொடிகளை நேரடியாகவோ அல்லது மண்ணெண்ணெயுடன் கலந்து பசையாக சீரமைக்க வேண்டிய பொருளின் மேற்பரப்பில் தேய்க்க வேண்டும். இதனால் மேற்பரப்பு சீரடைகிறது. மேற்கூறிய கடினப்பொருட்களின் வேறொரு பொருளின் மேல் உராய்ந்தால் அப்பொருளின் மேற்பரப்பு தேய்வடைகிறது. பொடிக்கு எந்தவித தேய்மானமும் இல்லை.

பற்சக்கரங்களின் பற்கள், அளவுத்துண்டு, உலக்கை, அச்சுத்தண்டு, தாங்கித்தளம், தாங்கிக் கிண்ணம் போன்ற பல எந்திர உறுப்புகள் அணைவு முறையில் சீரமைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  • Lawrence E. Doyle "Manufacturing Processes and Materials for Engineers" - prentice Hall Inc., USA., 1969.
  • H.M.T., Bangalore, 'Production Technology' Tata MrGraw - Hill Publishing Co.Ltd., New Delhi, 1980.
  • தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு; 63-1, அறிவியல் களஞ்சியம் தொகுதி - I பக்கம் 734 - 735, பதிப்பாசிரியர்; பி. எல். சாமி

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணைவு&oldid=3494402" இலிருந்து மீள்விக்கப்பட்டது