அட்டிக்கைட்டு
Appearance
அட்டிக்கைட்டு Attikaite | |
---|---|
![]() கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் அட்டிக்கைட்டு | |
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | Ca3Cu2Al2(AsO4)4(OH)4·2H2O |
இனங்காணல் | |
நிறம் | இளம் நீலம், பச்சை கலந்த நீலம் |
ஒப்படர்த்தி | 3.2 |
அட்டிக்கைட்டு (Attikaite) என்பது Ca3Cu2Al2(AsO4)4(OH)4·2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இலேசான நீல நிறம் மற்றும் பச்சை கலந்த நீலம் ஆகிய நிறங்களில் அட்டிக்கைட்டு காணப்படுகிறது. கிரீசு நாட்டின் அட்டிக்கா மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் கனிமத்திற்கு அட்டிக்கைட்டு எனப் பெயரிடப்பட்டது.[1]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் அட்டிக்கைட்டு கனிமத்தை Atk என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Attikaite பரணிடப்பட்டது 2019-03-21 at the வந்தவழி இயந்திரம் on mindat.org
வெளி இணைப்புகள்
[தொகு]- Attikaite data sheet
- Attikaite on the Handbook of Mineralogy