அட்டகா கான்
கான்-இ-கலன் சம்சுத்-தின் முகம்மது கான் அட்டா கான் என்றும் அழைக்கப்படும் சம்சுதீன் முகம்மது அட்டா கான் அரசவையில் ஆலோசகர் அல்லது அமைச்சர் பதவி உட்பட பல முக்கியமான பதவிகளை வகித்துள்ளார். 1561 நவம்பரில் இவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அட்டகா கான் அக்பரின் பிரியமான செவிலியர்களில் ஒருவரான ஜிஜி அங்காவின் கணவர் ஆவார். 1562 இல் 1562 மே 16 ஆக்ரா கோட்டையில் பார்வையாளர்களின் மண்டபமான திவான்-இ-ஆமில் அமர்ந்திருந்த இவர் ஆதாம் கானால் கொலை செய்யப்பட்டார்.
பின்னணி
[தொகு]கசினியைச் சேர்ந்த ஒரு எளிமையான விவசாயி மிர் யர் முகம்மதுவின் மகன் சம்சுதீன், கம்ரான் மிர்சாவின் இராணுவத்தில் ஒரு சிப்பாயாக வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு சமயம் இவர் உமாயூனை கங்கையில் மூழ்கவிடாமல் காப்பாற்றினார். அதற்கு வெகுமதியாக, உயுமாயூன் இவரை தனது தனிப்பட்டப் பணிக்கு அழைத்துச் சென்றார். இவரது மனைவி அக்பரின் வளர்ப்புத் தாய்மார்களில் ஒருவரானார். அவர் வளர்ப்பு தாய் (அனகா) என்றும் அவரது கணவர் சம்சுதீன் வளர்ப்பு தந்தை (அட்டகா) என்றும் நியமிக்கப்பட்டார். இவர் கான் பட்டத்தையும் பெற்றார். அஜீஸ் அக்பரின் வளர்ப்பு அல்லது பால்-சகோதரர் (கோகா) ஆனார்.
இறப்பு
[தொகு]1561, நவம்பர் மாதம் அக்பரின் விருப்பமான தளபதியான அட்டகா கான், முனிம் கானுக்கு பதிலாக பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனம் அட்டா கானின் தாயார் மகாம் அங்காவை அதிருப்தியடையச் செய்தது. 1562 மே 16 ஆக்ரா கோட்டையில் பார்வையாளர்களின் மண்டபமான திவான்-இ-ஆமில் அமர்ந்திருந்த இவரை ஆதாம் கான் ஒரு கூட்டத்துடன் வந்து கொலை செய்தார். [1] இந்தக் கொலையைக் கேள்விப்பட்டு கோபமடைந்த அக்பர், ஆதாம் கானை கோட்டையின் கோபுரங்களிலிருந்து தள்ளி கொல்ல உத்தரவிட்டார். இந்த முயற்சி ஆதாம் கானின் கால்களை மட்டுமே உடைத்தது, எனவே இன்னும் கோபமடைந்த பேரரசர் இவரை மீண்டும் கீழே தள்ளும்படி உத்தரவிட்டார். இரண்டாவது முயற்சி ஆதாம் கானை உடனடியாகக் கொன்றது. அட்டா கான் இறந்ததை அறிந்த மகாம் அங்கா மனப்பிறழ்ச்சிக் கொண்டு நாற்பது நாளில் இறந்து போனார்.
அட்டகா கான் இறந்த பிறகு, இவரது கல்லறை முகலாய பேரரசர் அக்பரின் அறிவுறுத்தலின் பேரில், 1566-67 இல் இவரது வளர்ப்பு சகோதரர் மிர்சா அஜீஸ் கோகாவால் கட்டப்பட்டது. இது நிஜாமுதீனின் வடக்கு விளிம்பில் அமைந்துள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டின் சூஃபி துறவி நிஜாமுதீன் ஆலியாவின் தர்காவுக்கு மிகவும் பிரபலமானது. அதன் கட்டிடக் கலைஞர் புகாராவைச் சேர்ந்த உஸ்தாப் குடா குலி மற்றும் காலிகிராஃபர் பாகி முஹம்மது ஆகியோர், வெள்ளை பளிங்கு அடுக்குகளில் குர்ஆனிய வசனங்களைச் சேர்த்தனர். சிவப்பு மணற்கல் வெளிப்புறச் சுவர்களில் பதிக்கப்பட்டிருந்து. இது இவரது மரண முறையைப் பிரதிபலிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இது இவரை ஒரு தியாகியாக கருதப்பட்டது என முகலாய வரலாற்றாசிரியர் அபுல் பாஸா கூறுகிரார் . கல்லறையின் தெற்கு வாசலில் ஒரு கல்வெட்டு 974 AH (1566-67) இல் முடிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. [2] பூல்-பூலையன் என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்த கல்லறை, உள்ளே ஒரு சிக்கலான புதிர்வழிகளுடன் குதுப் மினாரின் வடக்கே அமைந்துள்ள லால் கோட்டின் கோபுரங்களில் நிற்கிறது.
குறிப்புகள்
[தொகு]- ↑ The punishment of Adham Khan அக்பர்நாமா
- ↑ பரணிடப்பட்டது 2008-06-09 at the வந்தவழி இயந்திரம்