உள்ளடக்கத்துக்குச் செல்

அடோனிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடோனிஸ்
Adonis
துணைஅப்ரோடிட் மற்றும் புரோசெர்ப்பினா
பெற்றோர்கள்Cinyras and Myrrha (by ஆவிட்), Phoenix and Alphesiboea (by எசியோடு)
குழந்தைகள்Golgos, Beroe

அடோனிஸ் (Adonis[a] ) என்பவர் கிரேக்கத் தொன்மங்களில் கூறப்படும் அப்ரோடிட் மற்றும் புரோசெர்ப்பினா தெய்வத்தின் இறந்த காதலராவார்.

ஒரு நாள், அடோனிஸ் வேட்டைக்குப் போன போது ஒரு காட்டுப்பன்றியின் தாக்குதலுக்கு உள்ளாகிறார். காயமுற்ற அடோசனிசை அப்ரோடிட் தன் கைகளில் ஏந்தி அழுதுகொண்டிருக்கையில் இறக்கிறார். அவளின் கண்ணீரும் அடோனிசின் குருதியும் கலந்து அனிமொன் என்னும் செந்நிறப் பூவாக மாறுகிறது. அப்ரோடைட் தனது துயரத்தை நினைவுகூரும் அடோனியா பண்டிகையை அறிவித்தாள். இது ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலத்தின் நடுப்பகுதியில் பெண்களால் அனுசரிக்கபட்டது. இந்த பண்டிகையின் போது, கிரேக்க பெண்கள் வேகமாக முளைக்கும் தாவரங்களின் விதைகளை சிறிய தொட்டிகளில் இட்டு வளர்ப்பார்கள். "அடோனிஸ் தோட்டங்கள்" என்னும் அவற்றை அப்பெண்கள் தங்கள் வீடுகளின் மேல் வெப்பம் மிகுந்த வெயிலில் வைப்பார்கள். இதன் பிறகு தாவரங்கள் முளைக்கும், என்றாலும் விரைவில் வாடி இறந்துவிடும். அப்போது பெண்கள் அடோனிசின் மரணத்திற்கு துக்கம் அனுசரித்து, தங்கள் ஆடைகளை கிழித்துக் கொண்டும், மார்பில் அடித்துக்கொண்டும் துக்கப்படுவார்கள்.

உயிர்தெழல்

[தொகு]

அவர் இறந்த பிறகு புரோசெர்ப்பினா என்னும் பாதாள உலகத்துப் பெண் அவரை உயிர்ப்பிக்கிறாள். அதற்காக அவர் இருண்ட பாதாள உலகத்திலே அவளோடு ஆறுமாதங்கள் இருக்கவேண்டியவனாகின்றார். அடுத்த ஆறு மாதங்கள் ஆப்ரொடைட்டியுடன் இருக்கலாம். இந்தக் கதை பருவங்களின் மாறுதலைக் காட்டுவது என்பார்கள்.

மூலம்

[தொகு]
பொம்பெயில் அடோனிஸ், குபிட், வீனஸ் ஆகியோரை சித்தரிக்கும் ஒரு பழங்கால ஓவியம்

கிரேக்கர்கள் அடோனிசின் வழிபாட்டு முறையானது அண்மைக் கிழக்கு வம்சாவளியைச் சேர்ந்ததாகக் கருதினர். அடோனிசின் பெயர் "ஆண்டவர்" என்று பொருள்படும் கானானிய சொல்லிலிருந்து வந்தது என்றும், பெரும்பாலான நவீன அறிஞர்கள் அப்ரோடைட், அடோனிசின் கதை முந்தைய மெசொப்பொம்மோமிய தொன்மமான இன்னா (இஷ்தார்) மற்றும் டுமுசிட் (தம்முஸ்) ஆகியவற்றிலிருந்து வந்ததாக கருதுகின்றனர்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சமயம் பற்றிய ஆய்வுகளில், அடோனிஸ் என்பவர் இறந்து உயிர்பெற்று வரும் கடவுளுக்கு முதன்மையான எடுத்துகாட்டாக பரவலாகக் சுட்டப்பட்டார். இவரது பெயர் நவீன காலத்தில் அழகான தொன்மைக்கால இளைஞர்களை குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்புகள்

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Burkert 1985, ப. 176–177.
  2. Cyrino 2010, ப. 97.
  3. R. S. P. Beekes, Etymological Dictionary of Greek, Brill, 2009, p. 23.
  4. Botterweck & Ringgren 1990, ப. 59–74.
  5. West 1997, ப. 57.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடோனிஸ்&oldid=3692459" இலிருந்து மீள்விக்கப்பட்டது