அடங்க மறு
அடங்க மறு | |
---|---|
இயக்கம் | கார்த்திக் தங்கவேல் |
தயாரிப்பு | சுசாதா விசயகுமார் |
கதை | கார்த்திக் தங்கவேல் |
இசை | சாம் சி. எஸ். |
நடிப்பு | செயம் இரவி ராசி கன்னா சம்பத் இராச் |
ஒளிப்பதிவு | சத்தியன் சூரியன் |
படத்தொகுப்பு | அந்தோணி.எல். ரூபென் |
ஓட்டம் | 146 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 15 கோடி |
அடங்க மறு (Adanga Maru), கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் தமிழில் வெளியான திரைப்படம். இத்திரைப்படத்தில் செயம் இரவி, ராசி கன்னா, சம்பத் இராச் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்[1]. இப்படம் சாம் சி. எசின்[2] இசையில், சத்தியன் சூரியன்ன் ஒளிப்பதிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2017இல் தொடங்கியது.
நடிகர்கள்
[தொகு]- செயம் இரவி- சுபாசாக
- ராசி கன்னா - அனித்தாவாக
- சுரேஷ் சந்திர மேனன் - அனித்தாவாக அப்பாவாக
- பொன்வண்ணன் - சுபாசின் தந்தையாக
- சுப்பு பஞ்சு அருணசலம் - சுபாசின் சகோதரராக
- பாபு அந்தோணி - வணிகர் டைகூன் சஞ்செய்யாக
- முனீசுகாந்து இராமதாசு- காவலராக
- சம்பத்து இராச்- சாரங்கனாக
- மைம் கோபி - காவல் ஆய்வாளர் முத்துக்கருப்பனாக[3]
- அழகம்பெருமாள் - சந்திரானாக
- சபீர் கல்லரக்கல்
- பூர்ணா
கதை
[தொகு]பணியில் இருக்கும் போது செய்ய முடியாததை ஒரு முன்னாள் காவல் அலுவராக ஒருவர் செய்து முடிப்பதுதான் அடிப்படைக்கதை[4].கொலை வழக்கொன்றில் அதிகாரம் படைத்த குற்றவாளிகளை சுபாசு கைது செய்ததால், அவரின் குடும்பம் பலியாகிறது. பணி, குடும்பம் என எல்லாவற்றையும் இழந்த அவரிடம் மிஞ்சியிருப்பது கோபம் மட்டும்தான். தன் அறிவாலும் நுட்பங்களாலும் தன் எதிரிகளை அழிக்கின்றார்[5].
படப்பணிகள்
[தொகு]இத்திரைப்படம் கார்த்திக் தங்கவேலுவின் இயக்கத்தில்[6] , கெவின் குமார் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்ற உள்ளது குறித்து திசம்பர் 2017இல் செயம் இரவி குமுக ஊடகங்களில் அறிவித்தார். திசம்பர் 2017இல் தொடங்கிய இப்படத்தின் பணிகள் மே 2018இல் நிறைவடைந்தன.
இசைப்பணி
[தொகு]இப்படத்தின் பாடல், பின்னணி இசைப்பணிகளை சாம் சி. எஸ். மேற்கொண்டுள்ளார்.[7] ஆகத்து 2018இல் சோனி நிறுவனம் இப்படத்தின் பாடல்களை வெளியிட்டது.
Untitled | ||||
---|---|---|---|---|
காலவரிசை | ||||
|
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |
---|---|---|---|---|
1. | "ஆங்கு வாங்கு" | சாம் சி.எசு, முகேசு, எம்.எல்.ஆர் கார்த்திகேயன் | 4:26 | |
2. | "சாயாளி" | சத்தியபிரகாசு, சின்மயி | 5:15 | |
3. | "பச்சை துரோகங்கள்" | அரிச்சந்திரன் | 3:46 | |
4. | "கார் இருள்" | சிவம் | 3:07 | |
மொத்த நீளம்: |
17:34 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://cinema.dinamalar.com/tamil-news/74568/cinema/Kollywood/Adangamaru-escaped.htm
- ↑ https://cinema.maalaimalar.com/Cinema/Review/2018/12/21110717/1219197/Adanga-Maru-Movie-Review-in-Tamil.vpf
- ↑ https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/jayam-ravi-adanga-maru-tamil-movie-review-rating/moviereview/67187896.cms
- ↑ https://www.vikatan.com/anandavikatan/2019-jan-02/cinema-news/147036-adanga-maru-movie-review.html
- ↑ https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25807069.ece
- ↑ "Adanga Maru: Jayam Ravi announces title of his next film, will go on floors on 14 December- Entertainment News, Firstpost". firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 2018-10-31.
- ↑ "Adanga Maru - All Songs - Download or Listen Free Online". Saavn. பார்க்கப்பட்ட நாள் 2018-10-31.