உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்சு சதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சு சதா
Anju Chadha
பிறப்பு
அகமதுநகர், இந்தியா
வதிவு
தேசியம்இந்தியன்
Alma mater

அஞ்சு சதா (Anju Chadha) என்பார் இந்திய உயிர்வேதியியலாளர் ஆவார். இவர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னையின் பேராசிரியராக உள்ளார்.[1] இவரின் ஆய்வானது உயிரிவினையூக்கி, நொதி செயல் முறைகள், கரிம பொருள் உற்பத்தியில் நொதிகள் சமச்சீரற்ற தொகுப்பில் நொதிகள், பசுமை வேதியியலில் மற்றும் உயிரி உணர்வி துறைகளில் முக்கியமானவை.[2]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

சதா இந்தியாவில் அகமதுநகரில் பிறந்தார்.[3]

கல்வி

[தொகு]

உயர்நிலைப் பள்ளியில் சிறந்த மாணவராகத் தேர்வு செய்யப்பட்ட சதா நவ்ரோஸ்ஜி வாடியா கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றபோது, மகாராஷ்டிரா மாநில அரசு இவருக்கு உதவித்தொகை வழங்கியது. கல்லூரியில் வேதியியல் துறையின் பரிசினையும் பெற்றார்.[4] இவர் 1975இல் வேதியியலில் பட்டம் பெற்றார்.[4][2] வேதியியலில் ஆர்வம்கொண்ட இவர் 1977ஆம் ஆண்டில் புனே பல்கலைக்கழகத்தில் தனது முதுநிலை அறிவியல் பட்டத்தைப் பெற்றார். 1984ஆம் ஆண்டில், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் உயிர்-கரிம வேதியியலில் கவனம் செலுத்தினார்.[2]

பணி

[தொகு]

சதா இந்திய உயிர்-கரிம வேதியியலாளர்கள் சங்கம், இந்திய வேதியியல் ஆராய்ச்சி சங்கம் மற்றும் பெங்களூரின் இந்திய அறிவியல் நிறுவன முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். இவர் சென்னை அறிவியல் அறக்கட்டளையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் உள்ளார்.[5]

அங்கீகாரம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Anju Chadha". பார்க்கப்பட்ட நாள் 16 March 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Anju Chadha". Archived from the original on 27 May 2009. பார்க்கப்பட்ட நாள் 16 March 2014.
  3. "Science – a joyous playing field" (PDF). பார்க்கப்பட்ட நாள் 16 March 2014.
  4. 4.0 4.1 4.2 4.3 "Anju Chadha". பார்க்கப்பட்ட நாள் 16 March 2014.
  5. "Career profile". Archived from the original on 31 May 2009. பார்க்கப்பட்ட நாள் 16 March 2014.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சு_சதா&oldid=4053870" இலிருந்து மீள்விக்கப்பட்டது