உள்ளடக்கத்துக்குச் செல்

அஜித் பால் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜித் பால் சிங்
தனித் தகவல்
முழு பெயர்அஜித் பால் சிங்
பிறப்பு1 ஏப்ரல் 1947 (1947-04-01) (அகவை 78)
சன்சார்பூர், பஞ்சாப், இந்தியா
உயரம்5 அடி 10 அங் (1.78 m)[1]
விளையாடுமிடம்நடுக்கள ஆட்டவீரர்
பதக்க சாதனை

அஜித் பால் சிங் (Ajit Pal Singh, பிறப்பு ஏப்ரல் 1, 1947[2]) இந்திய பஞ்சாப் மாநிலத்து சன்சார்பூரை சேர்ந்த தொழில்முறை வளைதடிப் பந்தாட்ட விளையாட்டு வீரராவார். இந்திய வளைத்தடிப் பந்தாட்ட அணியின் தலைவராக விளையாடியுள்ளார். இவருக்கு 1970க்கான அருச்சுனா விருது அறிவிக்கப்பட்டு 1972இல் வழங்கப்பட்டது. வளைத்தடிப் பந்தாட்டத்தில் நடுக்கள விளையாட்டாளராக இருந்தார். 1975இல் மலேசியாவின் கோலாலம்பூரில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் தலைவராக விளையாடி வெற்றி ஈட்டினார்.

அஜித் பால் சிங் மூன்று ஒலிம்பிக் போட்டிகளில், 1968,1972,1976, இந்திய அணியில் விளையாடியுள்ளார்; முதல் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி மூன்றாவதாக வென்று வெண்கலப் பதக்கம் பெற்றது.[3] 2102ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இவர் இந்தியக் குழுத்தலைவராக நியமிக்கப்பட்டார். அரசியல்வாதியோ, அலுவலர்களோ அல்லாது ஒரு விளையாட்டு வீரர் இவ்வாறாக குழுத்தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவது அதுவே முதல் முறையாகும்.[4] இருப்பினும் கடுமையான முதுகெலும்பு அழற்சியால் இந்நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை.[5] 1992இல் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[6]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Player's Profile". Archived from the original on 2011-02-22. Retrieved 2016-07-04.
  2. "Sikh-History.com". Archived from the original on 16 செப்டம்பர் 2015. Retrieved 28 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Ajitpal Singh". Olympics at Sports-Reference.com. Sports Reference LLC. Retrieved 2016-07-04. பரணிடப்பட்டது 2011-02-22 at the வந்தவழி இயந்திரம் "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-02-22. Retrieved 2016-07-04.
  4. http://www.deccanherald.com/content/239075/ajit-pal-singh-named-indian.html
  5. "Brigadier Raja named India’s acting Chef-de-Mission". The Hindu (Chennai, India). 27 July 2012. http://www.thehindu.com/sport/other-sports/article3691327.ece. 
  6. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. Retrieved July 21, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜித்_பால்_சிங்&oldid=4209864" இலிருந்து மீள்விக்கப்பட்டது