அச்மீர் தில்லி நுழைவாயில்
Appearance
தில்லி நுழைவாயில் Delhi Gate | |
---|---|
அமைவிடம் | அச்மீர், இராசத்தான், இந்தியா |
ஆள்கூற்றுகள் | 26°27′44″N 74°37′39″E / 26.4621°N 74.6276°E |
கட்டப்பட்டது | 1571 |
க்காக கட்டப்பட்டது | முகலாய வம்சம் |
மீட்டெடுத்தவர் | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
கட்டிட முறை | இசுலாம் |
நிர்வகிக்கும் அமைப்பு | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
தில்லி நுழைவாயில் (Delhi Gate, Ajmer) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ள அச்மீர் நகரப் பகுதியில் உள்ளது. சூஃபி துறவி குவாச்சா மொய்னுதீன் சிசுடியின் தர்காவுக்குச் செல்லும் வழியில் ஒரு பெரிய வளைவு நுழைவாயிலாக இந்நுழைவாயில் அமைந்துள்ளது.[1] வலப்பக்கத்தில் தூண்களுடன் கூடிய மண்டபம் காவலர்களால் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நுழைவாயில் முகலாய பேரரசர் அக்பரால் கி.பி 1571 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. மேலும் இந்த நினைவுச்சின்னம் இந்திய தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "DELHI GATE CONSISTING ONE ARCHAWAY | ARCHAEOLOGICAL SURVEY OF INDIA JAIPUR CIRCLE". asijaipurcircle.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-16.
- ↑ Shoeb Khan (2017-04-13). "Ajmer mughal gates: 445 years on, Ajmer's Mughal-era gates still used for policing | Jaipur News". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2021-12-16.