அசோக் சோட்டலால் அகர்வால்
அசோக் சோட்டலால் அகர்வால் (Ashok Chhotelal Agarwal)(27 ஆகஸ்ட் 1937 - 23 பிப்ரவரி 2019) என்பவர் இந்திய நீதிபதி மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.
கல்வி
[தொகு]அகர்வால் 1937இல் பிறந்தார். இவர் பி.ஏ., எல்.எல். பி. தேர்ச்சி பெற்றார். சட்டப்படிப்பினை புனே ஐ. எல். எஸ். சட்டக் கல்லூரியில் 1960ல் முடித்தார்.[1] பின்னர் கீழமை நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியினைத் தொடங்கி பாம்பே உயர்நீதி மன்றத்தில் பயிற்சி பெற்றார்.[2]
நீதிபதி பணி
[தொகு]அகர்வால் 1974-ல் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு வழக்கில் அரசாங்க உதவி வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1986ஆம் ஆண்டு நவம்பர் 21 நாளன்று, பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக அகர்வால் நியமிக்கப்பட்டார். 1987 ஜூன் 12-ல் நிரந்தர நீதிபதியானார்.[3] பின்னர் அகர்வால், தலைமை நீதிபதியாக 1999 மே 24 அன்று சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஆகத்து 26, 1999-ல் பணி ஓய்வு பெற்றார்.[4] ஓய்வுக்குப் பிறகு, அக்டோபர் 1999-ல் இவர் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், புது தில்லியின் தலைவரானார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Emmanuel, Meera. "Madras High Court mourns sudden demise of former Chief Justice AC Agarwal". Bar and Bench - Indian Legal news (in ஆங்கிலம்). Retrieved 2021-06-01.
- ↑ Court, India Supreme (2005). Judges of the Supreme Court and the High Courts as on ... (in ஆங்கிலம்). Ministry of Law, Justice and Company Affairs, Department of Justice, Government of India.
- ↑ High Court of Bombay, Hon'ble Former Justices. "MR. A.C. Agarwal". Retrieved 1 June 2021.
- ↑ "Madras High Court | Former Chief Justices". www.hcmadras.tn.nic.in. Retrieved 2021-06-01.