அசோகச் சக்கரம்
Appearance


அசோகச் சக்கரம் (Ashoka Chakra) அசோகரின் பல சிற்பங்களில் காணப்படும் ஓர் 24 ஆரங்களைக் கொண்ட சக்கர வடிவ சின்னமாகும். இது பௌத்தர்களின் எட்டு கோல்களைக் கொண்ட தர்ம சக்கரத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அசோகர் பயன்படுத்தியமையால் இது அசோகச் சக்கரம் என்றும் அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற சாரநாத் இல் உள்ள சிங்க தலைகள் பதித்த அசோகத்தூணில் உள்ள இந்தச் சக்கரம் இந்திய தேசியக் கொடியில் மையப் பகுதியில் கடற்படை நீலத்தில் இடம் பெற்றுள்ளது. அசோகத் தூணில் உள்ள சிங்கத் தலைகள் இந்தியக் குடியரசின் இலச்சினையாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.[1] இந்த சக்கரம் இந்திய தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ளது.