உள்ளடக்கத்துக்குச் செல்

அசுவதி திருநாள் இராம வர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளவரசர் இராம வர்மன்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சிறீ பத்மநாபதாச அசுவதி திருநாள் இராம வர்மன்
பிறப்பு13 ஆகத்து 1968 (1968-08-13) (அகவை 56)
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)பாடகர், சரசுவதி வீணைக் கலைஞர், எழுத்தாளர்.
இசைத்துறையில்1990 முதல் தற்போது வரை
இணையதளம்ramavarma

இளவரசர் இராம வர்மன் என்று அழைக்கப்படும் அசுவதி திருநாள் இராம வர்மன் (Aswathi Thirunal Rama Varma) ஒரு இந்திய பாரம்பரிய இசைக்கலைஞரும் திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தின் உறுப்பினருமாவார். மேலும் இவர் கர்நாடக பாடகரும் வீனையிசைக் கலைஞருமாவார். இவர் இசை ஆசிரியராகவும், இசைக்கலைஞராகவும், எழுத்தாளராகவும் சொற்பொழிவாளராகவும் அங்கீகரிக்கப்படுகிறார். இவர் இந்தியா முழுவதும், அமெரிக்கா, இங்கிலாந்து, அமீரகம், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். இவரது இசை நிகழ்ச்சிகள், வகுப்புகள், நிகழ்ச்சியின் யூடியூப் காணொளிக் காட்சிகள் போன்றவை இசை ஆர்வலர்கள், இசை மாணவர்கள், தொழில்முறை இசைக்கலைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன. மேலும் அவை 50 லட்சம் (5 மில்லியன்) பார்வைகளை தாண்டிவிட்டன.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

இராம வர்மன் 1968 ஆகஸ்ட் 13 இல் திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தில் பிறந்தார். [1] [2]

செம்மங்குடி சீனிவாச ஐயரின் மூத்த சீடரான பேராசிரியர் வெச்சூர் ஹரிஹர சுப்பிரமணிய ஐயரின் கீழ் 1982 ஆம் ஆண்டில் முறையான குரல் இசை பாடங்களைத் தொடங்கினார். 1994 ல் அவர் இறக்கும் வரை தொடர்ந்து இவரது குருவாக இருந்தார். பின்னர், வர்மா பாலமுரளிகிருஷ்ணாவின் மூத்த சீடரானார். [2] [3] திருவனந்தபுரம் ஆர்.வெங்கடராமன் மற்றும் பேராசிரியர் கே.எஸ்.நாராயணசாமி ஆகியோரின் கீழ் சரசுவதி வீணையும் பயின்றார். .

இசை வாழ்க்கை

[தொகு]

இளவரசர் இராம வர்மன் 1990 இல் லண்டன் ராணி எலிசபெத் மாளிகையில் தனது முதல் பொது நிகழ்ச்சி ஒன்றை அளித்து, தனது முதல் குறுவட்டினை வெளியிட்டார். அப்போதிருந்து, இவர் பிரான்சின் ஆர்சனல் டி மெட்ஸ் உட்பட உலகம் முழுவதும் குறிப்பிடத்தக்க இடங்களில் கச்சேரிகள், பேச்சுக்களை வழங்கியுள்ளார். சென்னைமியூசிக் அகாதெமியில் நிகழ்ச்சியினை நடத்தியுள்ளார். இந்தியாவின் குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடந்த அப்போதைய குடியரசுத் தலைவர் ஆ. ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் முன்னிலையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். [4]

இசை விழாக்கள்

[தொகு]
இராம வர்மன் சுவாதி சங்கீதோத்சவத்தில் நிகழ்ச்சி நிகழ்த்துகிறார்

ராம வர்மன் சனவரி 4–13 முதல் திருவனந்தபுரத்தில் உள்ள குதிரை மாளிகையில் நடைபெறும் 10 நாள் ஆண்டு விழாவான சுவாதி சங்கீதோத்சவத்தை ஏற்பாடு செய்கிறார். மகாராஜா சுவாதி திருநாளின் இசையமைப்பிற்காக பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட இந்த திருவிழா, கர்நாடக, இந்துஸ்தானி இசையின் மேதைகளைக் கொண்டுள்ளது, மேலும் உலகம் முழுவதிலுமிருந்து இசை ஆர்வலர்களையும் ஈர்க்கிறது.

நவராத்திரி விழா தொடர்பாக திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி மண்டப இசை நிகழ்ச்சிகளையும் வர்மா ஏற்பாடு செய்கிறார். 2006 ஆம் ஆண்டில், இவர் மூத்த பாடகர் பாறசாலை பொன்னம்மாளை அங்கு பாட வைத்தார். மேலும் பெண்களை இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் அனுமதித்தார். இதனால் மண்டபத்திற்குள் பெண்களை அனுமதிக்காத 300 ஆண்டு பழமையான பாரம்பரியத்தை உடைத்தார். [1]

குறிப்புகள்

[தொகு]
  1. Ramakrishnan, Deepa H. (26 February 2005). "Royalty's humble face". The Hindu இம் மூலத்தில் இருந்து 29 மே 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050529224649/http://www.hindu.com/mp/2005/02/26/stories/2005022600190100.htm. பார்த்த நாள்: 4 December 2013.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2005-05-29. பார்க்கப்பட்ட நாள் 2020-07-16.
  2. 2.0 2.1 "Jamming at a jugalbandi". The Hindu. 2 May 2002 இம் மூலத்தில் இருந்து 4 ஜூலை 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030704023219/http://www.hindu.com/thehindu/mp/2002/05/02/stories/2002050200420200.htm. பார்த்த நாள்: 4 December 2013.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-07-04. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. "A new experience". 8 August 2005 இம் மூலத்தில் இருந்து 6 டிசம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071206052029/http://www.hindu.com/fr/2005/04/08/stories/2005040801860200.htm. பார்த்த நாள்: 27 March 2014.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-12-06. பார்க்கப்பட்ட நாள் 2020-07-16.
  4. "Prince Rama Varma". Webindia123. பார்க்கப்பட்ட நாள் 4 December 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aswathi Thirunal Rama Varma
என்பதில் ஊடகங்கள் உள்ளன.