உள்ளடக்கத்துக்குச் செல்

அசுரகுரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசுரகுரு
Theatrical release poster
இயக்கம்ஏ. ராஜ்தீப்
தயாரிப்புஜே. எஸ். பி. சதீஷ்
திரைக்கதைஏ. ராஜ்தீப்
இசைபின்னணி இசை:
சைமன் கே. கிங்
பாடலிசை:
கணேஷ் ராகவேந்திரா
நடிப்புவிக்ரம் பிரபு
மகிமா நம்பியார்
சுப்பாராஜூ
ஒளிப்பதிவுஇராமலிங்கம்[1]
படத்தொகுப்புலாரன்ஸ் கிஷோர்[2]
கலையகம்ஜே. எஸ். பி பிலிம் ஸ்டுடியோஸ்
விநியோகம்சக்தி பிலிம் பேக்டரி
வெளியீடுமார்ச்சு 13, 2020 (2020-03-13)
ஓட்டம்122 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அசுரகுரு (Asuraguru) என்பது 2020ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். ஜே. எஸ். பி பிலிம் ஸ்டுடியோஸ் என்ற பதாகையின் கீழ் ஜே. எஸ். பி. சதீஷ் தயாரித்த இப்படத்தை, ஏ. ராஜ்தீப் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கான உரையாடலை கபிலன் வைரமுத்து மற்றும் சந்துரு மாணிக்கவாசகம் ஆகியோர் எழுதியுள்ளனர். படத்தில் விக்ரம் பிரபு, மகிமா நம்பியார் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க, சுப்பாராஜூ, யோகி பாபு, நாகினீது ஆகியோர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[3] இந்த படம் 13 மார்ச் 2020 அன்று வெளியானது.[4]

கதைச்சுருக்கம்

[தொகு]

தனியார் அஞ்சல் ஊழியராக தன்னைக் காட்டிக் கொள்ளும் சக்தி (விக்ரம் பிரபு) பெருமளவு பணத்தைக் கொள்ளையடிப்பவராக உள்ளார். இதை தொடர் கொள்ளையாக செய்துவருகிறார். இந்த கொள்ளைகளை கண்டறிய காவல் அதிகாரி மாணிவாசகம் தீவிரமாக செயல்படுகிறார். அதேபோல தனது அவாலா பணத்தைக் கொள்ளையடித்தவனை கண்டுபிடிக்க தனியார் துப்பறிவாளரான தியாவை (மகிமா நம்பியார்) நிழல் உலகத் தலைவரான ஜமாலுதீன் (நாகிநீடு) அணுகுகிறான். சக்தி எதற்காக இந்த கொள்ளைகளில் ஈடுபடுகிறான். அவனை கண்டுபிடிக்க முடிந்ததா என்பதே கதையின் பிற்பகுதி ஆகும்.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

இதற்கு முன் இயக்குனர் மோகன் ராஜாவிடம் பணியாற்றிய ஏ. ராஜ்தீப் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். விக்ரம் பிரபு தனது துப்பாக்கி முனை படப்பிடிப்பில் வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது இந்த படத்தில் ஒப்பந்தமிட்டார். இப்படத்தின் முதன்மைப் படப்பிடிப்பு 15 பிப்ரவரி 2018 துவங்கியது. படப்பிடிப்பானது முக்கியமாக சென்னை, உடுமலைப்பேட்டை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது.[5][6][7][8]

இசை

[தொகு]

இப்படதிற்கான இசையை கணேஷ் ராகவேந்திரா அமைத்தார். பாடல் வரிகளை கபிலன் வைரமுத்து, கணேஷ் ராகவேந்திரா ஆகியோர் எழுதினர்.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "எவனானாலும்"  சிவம் 2:19
2. "என் தனி இரவு"  பத்மலதா 4:18
3. "வில்லாதி வில்லி"  நரேஷ் ஐயர் ரித்தி 3:48
மொத்த நீளம்:
10:26

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mahima Nambiar to play the lead in Vikram Prabhu's Asura Guru". The New Indian Express. 9 May 2018. https://www.cinemaexpress.com/stories/news/2018/may/09/mahima-nambiar-to-play-the-lead-in-vikram-prabhus-asura-guru-5921.html. பார்த்த நாள்: 23 October 2019. 
  2. "From Santosh Sivan to Jiiva to Nayanthara, young editor Lawrence Kishore is busy!" (in en). in.com. 14 April 2019 இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191023175107/https://www.in.com/entertainment/regional/from-santosh-sivan-to-jiiva-to-nayanthara-young-editor-lawrence-kishore-is-busy-373603.htm. பார்த்த நாள்: 23 October 2019.  பரணிடப்பட்டது 2019-10-23 at the வந்தவழி இயந்திரம்
  3. "Mahima Nambiar to team up with Vikram Prabhu for 'Asura Guru' - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 26 December 2018.
  4. "Asuraguru Film Review: A Film Revolving Around Several Heists And A Psychologically Ill Character!" (in அமெரிக்க ஆங்கிலம்). 12 May 2020. பார்க்கப்பட்ட நாள் 28 May 2020.
  5. "Vikram Prabhu's next titled 'Asura Guru'". Sify (in ஆங்கிலம்). Archived from the original on 19 February 2018. பார்க்கப்பட்ட நாள் 26 December 2018.
  6. "Tamil actor Vikram Prabhu's next titled 'Asura Guru'". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 26 December 2018.
  7. Subramanian, Anupama (9 July 2019). "Vikram Prabhu a thorough professional: Mahima". Deccan Chronicle.
  8. "Vikram Prabhu turns con man for Asura Guru; Mahima Nambiar plays detective". The New Indian Express.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுரகுரு&oldid=4095160" இலிருந்து மீள்விக்கப்பட்டது