அசிசு குரேசி
Appearance
அசிசு குரேசி | |
---|---|
மிசோரம் ஆளுநர் | |
பதவியில் 31 திசம்பர் 2014 – 28 மார்ச் 2015 | |
முன்னையவர் | கிரிசான் காந்த் பால் |
பின்னவர் | கேசரிநாத் திரிபாதி |
உத்தராகண்ட் ஆளுநர் | |
பதவியில் 15 மே 2012 – 7 சனவரி 2015 | |
முன்னையவர் | மார்கரட் அல்வா |
பின்னவர் | கிரிசான் காந்த் பால் |
உத்திரப் பிரதேச ஆளுநர் | |
பதவியில் 17 சூன் 2014 – 21 சூன் 2014 | |
முன்னையவர் | பன்வாரி லால் ஜோசி |
பின்னவர் | இராம் நாயக் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | போபால், போபால் இராச்சியம், பிரித்தானிய இந்தியா | 24 ஏப்ரல் 1941
இறப்பு | 1 மார்ச்சு 2024 போபால், மத்தியப் பிரதேசம், இந்தியா | (அகவை 82)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
முன்னாள் கல்லூரி |
|
தொழில் | வழக்கறிஞர் |
அசிசு குரேசி (Aziz Qureshi, 24 ஏப்ரல் 1941 – 1 மார்ச் 2024)[1] என்பவர் இந்திய அரசியல்வாதியும் மூத்த இந்தியத் தேசிய காங்கிரஸ் தலைவரும் ஆவார்.
இவர் முன்பு மிசோரம் மாநிலத்தின் 15வது ஆளுநராகப் பணியாற்றியவர்.[2] உத்தரகாண்டம் மாநில ஆளுநராகவும் பணியாற்றிய இவர், உத்தரப் பிரதேச ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். இவர் 24 சனவரி 2020 அன்று மத்தியப் பிரதேச அரசாங்கத்தால் மத்தியப் பிரதேச உருது அகாதமியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
1973-ல் இவர் மத்தியப் பிரதேசத்தில் அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் 1984-ல் சத்னா (மத்தியப் பிரதேசம்) தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
01 மார்ச் 2024 அன்று அஜீஸ் குரேஷி நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு வெள்ளிக்கிழமை இங்குள்ள மருத்துவமனையில் காலமானார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Veteran Congress leader and ex-UP Governor Aziz Qureshi dies
- ↑ "After Uttarakhand governor Aziz Qureshi moves Supreme Court, Centre says it never asked him to quit". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-01-26.