அக்பர்சின்
அக்பர்சின் என்பவர் 1453ஆம் ஆண்டு வடக்கு யுவான் அரசமரபின் அரியணைக்கு உரிமை கோரியவர்களில் ஒருவராவார். இவர் தைசுன் கான் மற்றும் மன்டூல் கான் ஆகியோரின் தம்பியாவார்.[1]
தைசுன் கான் 1433ஆம் ஆண்டு தன்னுடைய உளூசுக்கு சினோங்காக அக்பர்சினை நியமித்தார். தனது அரசவையில் எசனின் செல்வாக்கை நீக்க தோக்தோவா முயன்ற போது தோக்தோவா புகாவின் நம்பிக்கைத் துரோகத்துக்காக அரியணையின் ககான் பட்டத்தை அக்பர்சினுக்குக் கொடுக்க ஒயிரட்கள் முன் வந்தனர். எசன் தைசியின் மகனான காரா குர்தக் தூரேன் தைசி தனது தந்தையிடம் இதை ஏற்கக்கூடாது என்று இணங்க வைத்தும் கூட ஒயிரட்களும், அக்பர்சினும் ககானைத் தாக்கித் தோற்கடித்தனர். ககான் மேற்கு நோக்கித் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். தைசுன் கான் தன்னுடைய முன்னாள் மாமனாரான திசாப்தனாலேயே கொல்லப்பட்டார். திசாப்தனின் மகளான அல்தகானா ஓர்டாவில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
ஒயிரட்கள் இவரை நம்பவில்லை. இவர் தன்னுடைய சொந்த அண்ணனுக்குக் கூடத் துரோகம் செய்திருந்தார். தைசுன் கானின் இறப்பிற்குச் சிறிது காலத்திலேயே விருந்திற்கு வருமாறு அக்பர்சினை எசன் அழைத்தார். அக்பர்சினும், அவரது பரிவாரமும் வந்தபோது எசனும் மற்ற ஒயிரட் தலைவர்களும் அக்பர்சினின் பரிவாரத்திலிருந்த அனைத்துப் போர்சிசின் ஆண்களையும் கொன்றனர். இதில் விதிவிலக்கு காரா குர்தக் மட்டுமே. காரா குர்தக் தப்பித்து ஓடினார். பிறகு அவர் மொகுலிசுதானிலோ அல்லது நடு சைபீரியாவிலோ கொல்லப்பட்டார். அக்பர்சினின் இறப்பானது 1454இல் எசன் அரியணைக்கு வருவதற்கு வழி அமைத்தது.[2][3]