அக்னோசியா
அக்னோசியா | |
---|---|
![]() | |
அக்னோசியா பொருள்களின் பொருளை அப்படியே உணரும் அல்லது புரிந்துகொள்ளும் திறனை இழக்கிறது.. | |
சிறப்பு | உளநோய் மருத்துவம், நரம்பியல், நரம்புசார் உளவியல் |

அக்னோசியா அல்லது நுண்ணுணர்விழப்பு (Agnosia) என்பது உணரும் தகவல்களை செயல்படுத்த இயலா நிலையைக் குறிக்கும் ஒரு குறைபாடாகும். அக்னோசியா என்ற பெயராலும் இக்குறைபாடு அறியப்படுகிறது. பெரும்பாலும் இக்குறைபாட்டினால் பொருள்கள், நபர்கள், ஒலிகள், வடிவங்கள் அல்லது வாசனையை அடையாளம் காணும் திறனை இழக்க நேரிடுகிறது. குறிப்பிட்ட உணர்வுப் புலன் குறைபாடும் இல்லாமல் அல்லது குறிப்பிடத்தக்க நினைவு இழப்பும் இல்லாமல் இத்தகைய நுண்ணுணர்விழப்பு நிலை ஏற்படுகிறது [1]. மூளையில் காயம் அல்லது நரம்பியல் கோளாறு காரணமாக இக்குறைபாடு தோன்றுகிறது. குறிப்பாகத் தலையின் பின்புறத்திலுள்ள மூளைமடலின் கீழ்ப்பகுதியில் உண்டாகும் சேதத்தினால் இக்குறைபாடு தோன்றுகிறது [2].
நுண்ணுணர்விழப்பு பொதுவாக பார்த்தல் அல்லது கேட்டல் [3] போன்ற ஓர் ஒற்றை நடைமுறையை மட்டுமே பாதிக்கிறது [4]. புலனறி உணர்வுத் தகவல்களை முன் பின்னாக கையாளுவதில் சிக்கல் ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன [5].
இக்குறையின் வகைகளாவன:
- காட்சி துண்டலுக்கு பொருள் உணர இயலாமை
- கேட்டு பொருள் உணர இயலாமை
- படம் பார்த்து பொருள் உணர இயலாமை
- வார்த்தை உணர்ந்து பொருள் உணர இயலாமை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "AGNOSIA".
- ↑ Kolb, Bryan; Whishaw, Ian Q. (3 March 2003). Fundamentals of Human Neuropsychology. Worth Publishers. ISBN 978-0-7167-5300-1.
- ↑ "NINDS Agnosia Information Page". National Institute of Neurological Disorders and Stroke. Archived from the original on 2013-01-27. Retrieved 2012-03-28.
- ↑ Burns, MS (2004). "Clinical management of agnosia". Top Stroke Rehabil 11 (1): 1–9. doi:10.1310/N13K-YKYQ-3XX1-NFAV. பப்மெட்:14872395. http://thomasland.metapress.com/content/n13kykyq3xx1nfav/.
- ↑ "Agnosia". Archived from the original on 2017-05-26. Retrieved 2019-02-10.
வெளி இணைப்புகள்
[தொகு]வகைப்பாடு |
---|
- Types and brain areas
- Total Recall: Memory Requires More than the Sum of Its Parts சயன்டிஃபிக் அமெரிக்கன் (accessdate 2007-06-05)