அக்சு பெர்னான்டோ
Appearance
அக்சு பெர்னான்டோ (Akshu Fernando, பிறப்பு: மார்ச்சு 11 1991), இலங்கை பானதுறைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார்.[1] இவர் ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2010/11 பருவ ஆண்டுகளில், இலங்கை பானதுறை விளையாட்டுக்கழக அணி, கோல்ட் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதியன்று அன்று அக்சு பெர்னான்டோ ஒரு விபத்தில் படுகாயமடைந்தார். மவுண்ட் லாவினியாவில் தனது அணியினருடன் பயிற்சியின் போது ரயிலில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[2] இணையான பாதையில் முதல் ரயில் சென்ற பிறகு இவர் எதிர் திசையில் இருந்து ரயில் பாதையை கடக்க முயன்ற போது இந்த சம்பவம் நடந்தது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Akshu Fernando". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 November 2017.
- ↑ Drysdale, Neil. "Aberdeenshire CC professional injured in train crash in Sri Lanka". Press and Journal (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-31.
- ↑ "Ex-Sri Lanka cricketer in rail tragedy". Sunday Observer (in ஆங்கிலம்). 2018-12-29. பார்க்கப்பட்ட நாள் 2018-12-31.
புற இணைப்புகள்
[தொகு]- Askhu Fernando at Cricket Archive