உள்ளடக்கத்துக்குச் செல்

அக்கீம் அப்துல் அமீது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்கீம் அப்துல் அமீது
Hakim Abdul Hameed
பிறப்பு14 செப்டம்பர் 1908
தில்லி, இந்தியா
இறப்பு22 சூலை 1999
இந்தியா
பணிகல்வியாளர்,மருத்துவர்
அறியப்படுவதுயூனானி மருத்துவமும் கல்வியும்
விருதுகள்பத்மசிறீ
பத்ம பூசண்

அக்கீம் அப்துல் அமீது (Hakim Abdul Hameed) கிரேக்க-அராபிய வைத்திய முறையான யூனானி மருத்துவ முறையில் சிகிச்சையளித்த இந்திய மருத்துவராவார். இவரது காலம் 1908 முதல் 1999 வரையுள்ள ஆண்டுகளாகும். இயாமியா அம்தார்து என்ற உயர்கல்வி நிறுவனத்தை நிறுவி அதிபராகவும் அமீது பணியாற்றினார். அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்தின் அதிபராகவும் பணிபுரிந்துள்ளார்.[1][2] மேலும் இவர் அம்தார்து ஆய்வகங்களின் நிறுவனராகவும் தலைமை அறங்காவலராகவும் இருந்தார்.[1] இவரது சேவைகளைப் பாராட்டிய இந்திய அரசாங்கம் 1965 ஆம் ஆண்டு நான்காவது உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருதையும்[3] 1992 ஆம் ஆண்டு மூன்றாவது உயரிய குடிமை விருதான பத்மபூசண் விருதையும்[4][5] வழங்கி சிறப்பித்தது.

தொழில்

[தொகு]

அக்கீம் அப்துல் அமீது 1993 ஆம் ஆண்டு புதுதில்லியிலுள்ள சங்கம் விகாரில் அம்தார்து பொதுப் பள்ளிக்கூடத்தை நிறுவினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Aligarh Movement". Aligarh Movement. 2015. பார்க்கப்பட்ட நாள் 5 May 2015.
  2. "Hamdard". Hamdard. 2015. Archived from the original on 14 ஏப்பிரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 5 மே 2015.
  3. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
  4. "Two Circles". Two Circles. 2015. பார்க்கப்பட்ட நாள் 5 May 2015.
  5. S. P. Agrawal (1993). Development Digression Diary Of India. Concept Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170223054. பார்க்கப்பட்ட நாள் 5 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கீம்_அப்துல்_அமீது&oldid=4004741" இலிருந்து மீள்விக்கப்பட்டது