அக்கார்டியன்
அக்கார்டியன் (ஆங்கிலம்:Accordion) என்பது கையில் எடுத்துச்செல்லதக்க காற்றிசைக்கருவியாகும். இதிலுள்ள காத்தூதிகளை கையால் இயக்கினால், காற்று உள்ளிருக்கும் மாழைத்தகடுகளை அதிர்வடையச் செய்து ஒலி எழுப்பும். உச்சசாயி (higher pitch) ஒலிகளை எழுப்பும் தகடுகளை வலக்கை இயக்குகிறது. இடக்கை, காற்றூதியையும்(bellows), தாழ்சாயி ஒலிகளை எழுப்பும் பொத்தானைகளையும் இயக்குகிறது.
பேச்சுவழக்கில் இந்த இசைக்கருவி அமுக்குப்பெட்டி (squeezebox) என அழைக்கப்படுகிறது குறிப்பிடப்படுகிறது . அக்கார்டியன் வாசிப்பவர் அக்கார்டியக்கலைஞர் என்று அழைக்கப்படுகிறார் . கான்செர்டினா , ஆர்மோனியம் மற்றும் பேண்டோனியன் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாகும். இவையனைத்தும் ஒரே ஆர்மோனியக் குடும்பத்தை சேர்ந்தவையாகும். ஆனால் பொதுவாக ஆர்மோனிய இசைக்கருவிகள் அக்கார்டிய வகை இசைக்கருவிகளை விட பெரியவை மற்றும் அவை நிலையாக தரையின் மேல் அமைக்கப்பட்டிருக்கும். ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கு குடியேற்றத்தின் அலைகள் காரணமாக அக்கார்டியன் இசைக்கருவி இன்று உலகம் முழுவதும் பரவலாக பரவியுள்ளது. சில நாடுகளில் (உதாரணமாக: அர்ஜென்டினா, பிரேசில்,[1][2] கொலம்பியா, டொமினிகன் குடியரசு, மெக்சிகோ மற்றும் பனாமா) இது பிரபலமான இசையில் பயன்படுத்தப்படுகிறது (உதாரணமாக: அர்ஜென்டினாவில் சாமமே ; பிரேசிலில் கவுச்சோ, ஃபோர்ரோ மற்றும் செர்டனேஜோ ; கொலம்பியாவில் வல்லேனாடோ ; டொமினிகன் குடியரசில் மெரெங்கு ; மற்றும் மெக்ஸிகோவில் நார்டெனோ ), மற்ற பகுதிகளில் (ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் பிற நாடுகள் போன்றவை) இது நடனம்-பாப் மற்றும் நாட்டுப்புற இசைக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
தோற்றம்
[தொகு]அக்கார்டியன் இசைக்கருவி 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கண்டறியப்பட்ட பல ஐரோப்பிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும் இதை அமெரிக்கவழி மூதாதையரைக் கொண்ட, வியன்னாவைச் சேர்ந்த டாமியன் (Cyrill Demian (1772–1847) ) என்பவர் 1829-இல், இதற்கு காப்புரிமையை மே 23 நாளில் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. டெமியனின் காப்புரிமை பெற்ற அக்கார்டியன் கருவி தற்காலத்திய நவீன அக்கார்டியன் கருவிகளுடன் சிறிய ஒற்றுமையைக் கொண்டிருக்கிறது. இது இடது கை பொத்தான் பலகையை மட்டுமே கொண்டிருந்தது, வலது கை வெறுமனே பெல்லோக்களை இயக்கும். அக்காலத்திய இசைக்கருவிகளில் ஒரு விசையை அழுத்துவதன் மூலம் ஒரு முழு நாண் ஒலிக்கும் வகையில் அமைந்திருக்கும் ஆனால் அவரது கருவியில் ஒரே விசையில் இரண்டு வெவ்வேறு நாண்களை ஒலிக்க செய்ய முடியும், அதனாலேயே டெமியன் காப்புரிமையை நாடினார். 1822 ஆம் ஆண்டு பெர்லினைச் சார்ந்த கிரிசுட்டியன்(Christian Friedrich Ludwig Buschmann) இக்கருவியின் அடிப்படை அமைவுகளை அமைத்ததாகக் கருதப்படுகிறார்.[கு 1][சான்று தேவை] இருப்பினும், மற்றொமொரு இதையொத்த இசைக்கருவியொன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[கு 2][3][4]
1828 ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து பிரிட்டனுக்கு துருத்தி அறிமுகப்படுத்தப்பட்டது.[5] 1831 ஆம் ஆண்டில் தி டைம்ஸில் இந்த கருவி பிரித்தானிய பார்வையாளர்களுக்கு புதியதாகக் குறிப்பிடப்பட்டது [6] மேலும் இது சாதகமாக மதிப்பாய்வு செய்யப்படவில்லை, இருப்பினும் அது விரைவில் பிரபலமடைந்தது. இக்கருவி 1840களின் நடுப்பகுதியில் நியூயார்க்கர்களிடமும் [7] பிரபலமடைந்தது.
ஊடகங்கள்
[தொகு]-
தொன்மையானது(~1830)
-
உட்புறத்தோற்றம்
-
கின்னரப்பெட்டி அக்கார்டியன்
-
இரசிய அக்கார்டியன்
-
இரசிய அக்கார்டியன்
-
ஒரு துருத்தி
குறிப்புகள்
[தொகு]- ↑ There is not a single document to back up this belief, Christian Friedrich Ludwig Buschmann was 16 years old at that time and we do have some handwriting of C.F. Buschschmann and his Father, but without any related notice within. First time of mentioned a aeoline was in a writing dated 1829.
- ↑ This is the accordion owned by Fredrik Dillner of Sweden, which has the name F. Löhner Nürnberg engraved (stamped) on it. The instrument was given to Johannes Dillner in 1830 or earlier
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Top Five - Os Maiores Sanfoneiros Da Música Sertaneja Atual". Blognejo.com. 27 August 2008. Archived from the original on Apr 22, 2021. பார்க்கப்பட்ட நாள் 22 April 2021.
- ↑ Brant, Ana Clara (2013-05-22). "Novo disco de Michel Teló junta sanfona, música sertaneja, eletrônica e ritmos dançantes". Divirta-se. Archived from the original on Mar 4, 2016.
- ↑ Interview With Fredrik Dillner - The Owner Of What May Be The World's Oldest Accordion The Free-Reed Journal, 22 June 2006
- ↑ Müller, Mette & Lisbet Torp (red.) Musikkens tjenere. Forsker, Instrument, Musiker - Musikhistorisk Museums 100 års Jubilæumsskrift 1998, 297 s., indb rigt illustreret பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-87-7289-466-9 Serie: Meddelelser fra Musikhistorisk Museum og Carl Claudius Samling ISSN 0900-2111
- ↑ The National Cyclopaedia of Useful Knowledge, Vol I, A–Arcesilaus, London, George Woodfall and Son, 1847, p.107.
- ↑ The Times, Thursday 9 June 1831; pg. 5; Issue 14560; col A: (Review of a performance by a flautist, Mr. Sedlatzek) "At the close of the concert Mr. Sedlatzek performed on a new instrument called the Accordion or Aeolian, which, however, has little beside its novelty to recommend it."
- ↑ New York Times, 19 May 1907:- 'The Lay of the Last of the Old Minstrels: Interesting Reminiscences of Isaac Odell, Who Was A Burnt Cork Artist Sixty Years Ago': "While we were drawing big crowds to the Palmer House on Chambers Street Charley White was making a great hit playing an accordion in Thalia Hall on Grand Street. In those days"(i.e. mid-1840s) "accordions were the real attraction to the public".